webeng

வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. மக்கள் வெகுண்டு எழுவார்கள்.. தலைவர்கள் ஆவேசம்!

வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள்.. மக்கள் வெகுண்டு எழுவார்கள்.. தலைவர்கள் ஆவேசம்!


ஸ்டாலின் 


திமுக தலைவர் ஸ்டாலின் திருக்குறளில் பதிலடி கொடுத்துள்ளார், அதில் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வள்ளுவரை, காவிக்கூட்டம் தனது கட்சிக்கு கச்சை கட்டத் துணைக்கு அழைப்பது தமிழ்த் துரோகம்! எத்தனை வர்ணம் பூசினாலும், உங்கள் வர்ண சாயம் வெளுத்துவிடும். சாயம் பூசுவதை விடுத்து, திருக்குறள் படித்து திருந்தப் பாருங்கள்!, #BJPInsultsThiruvalluvar என்று குறிப்பிட்டுள்ளார்.

கவிஞர் வைரமுத்து


திருவள்ளுவர் ஓர் அறிவுக்கடல். அவரை எந்தச் சிமிழுக்குள்ளும் அடைக்கப் பார்க்காதீர்கள் என கவிஞர் வைரமுத்துவும் கண்டித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டுள்ளார்.

வைகோ 


செந்நாப் போதார் திருவள்ளுவருக்குக் காவி உடை அணிவித்து, மதச் சாயத்தைப் பூசி பா.ஜ.க. டிவிட்டரில் படம் வெளியிட்டு இருப்பது கண்டனத்துக்கு உரிய செயலாகும் என மதிமுக பொதுச்செயலாளரும் ராஜ்யசபா எம்பியுமான வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சீமான் 


வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள், அப்படி செய்தால் மக்கள் வெகுண்டு எழுவார்கள் என்று நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.

வள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீர்கள். அவர் அனைவருக்கும் பொதுவானவர். அவரை இப்படி கலங்கப்படுத்த கூடாது. இதற்கு உடனடியாக தமிழக அரசு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்று சீமான் குறிப்பிட்டுள்ளார்.

திருமுருகன் காந்தி 


அனைவரும் ஒன்றே என்ற கருத்தை அழுத்தமாக அனைவரும் உணர்த்தும் நூலாக திருக்குறள் இருக்கிறது. திருவள்ளுவர் தமிழர். அவருக்கு மதம் கிடையாது. தமிழர்கள் ஏமாற தயாரில்லை என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும். திருவள்ளுவர் ஒன்றும் பாஜக உறுப்பினர் கிடையாது, என்று திருமுருகன் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

விஜயகாந்த் 


தேமுதிக தலைவர் விஜயகாந்த் கருத்து தெரிவித்துள்ளார். அதில், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வது தவறு. அப்படி பொதுவாக இருக்கும் ஒருவரை வைத்து அரசியல் செய்வது நாகரீகம் அற்றது. அவரை விடுங்கள். இது போன்ற செயல்களை யாராக இருந்தாலும் கைவிட வேண்டும்.

கமல்ஹாசன் 


மக்கள் நீதி மய்யம் தலைவர் நடிகர் கமல்ஹாசன் கருத்து தெரிவித்துள்ளார். அதில், திருவள்ளுவர் எந்த மதத்திற்கும் சொந்தமல்ல. திருவள்ளுவரை எல்லா மதத்தினரும் தனதாக்கிக் கொள்ள விரும்புகிறார்கள். ஆனால் அது தவறு. அவர் ஒரு பொதுக்கருத்து என்பது தான் உண்மை. அவர் அனைவருக்கும் பொதுவாக இருக்கிறார். யாருக்கும் அவர் சொந்தமில்லை. அவருக்கு வண்ணம் பூச தேவையில்லை. அப்படி பூசினால் அது தவறு.


    Share This Post

Post Comment

Post Comment
webeng

Relative News

ஓமந்தை ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!

ஓமந்தை ஆலய விவகாரம்; கைது செய்யப்பட்டவர்கள் விடுதலை!

மாற்றம் ஒன்றே தேவை!

மாற்றம் ஒன்றே தேவை!

சிறுத்தைகளுக்காக இனி சஜித்

சிறுத்தைகளுக்காக இனி சஜித்

Classifield