webeng

ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்ட 32 பொதுமக்களின் நினைவு நாள்

முல்லைத்தீவு – ஒதியமலையில் படுகொலை செய்யப்பட்ட 32 பொதுமக்களின் 35ஆம் ஆண்டு நினைவு நாள் நினைவுகூறப்பட்டது.

இலங்கை படைகளால் பொதுமக்கள் முப்பத்தி இரண்டு பேர் கடந்த 1984.12.02 அன்று  ஒதியமலைப் பகுதியில் வைத்து படுகொலை செய்யப்பட்டனர்.

அந்த படுகொலை நாளினுடைய நினைவுதினம் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் இரண்டாம் திகதி நினைவு கூரப்படுகிறது.

அந்த வகையில் இவ்வாண்டும் இன்று (திங்கட்கிழமை) குறித்த படுகொலை நாளின் முப்பத்தைந்தாம் ஆண்டு நினைவு நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடைபெற்றன.

இந்த நினைவுநாள் நிகழ்வில் உயிரிழந்தவர்களது உறவுகள் கலந்துகொண்டனர். நினைவிடத்தில் இடம்பெற்ற நிகழ்வுகளைத் தொடர்ந்து ஒதியமலை பிள்ளையார் ஆலயத்தில் விசேட ஆத்ம சாந்தி பிராத்தனைகள் இடம்பெற்று அன்னதானமும் வழங்கப்பட்டது.

முன்னாள் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் திருவாளர் க.கந்தசாமியின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் திருமதி சாந்தி சிறீஸ்கந்தராசா, வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், க.சிவநேசன், து.ரவிகரன், புதுக்குடியிருப்பு, கரைதுறைப்பற்று மற்றும் வவுனியா வடக்கு ஆகிய பிரதேச சபைகளினுடைய தவிசாளர்கள், புதுக்குடியிருப்புப் பிரதேச சபை உறுப்பினர்கள் வவுனியா வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர்கள் ஒதியமலை கிராம அபிவிருத்தி சங்க தலைவர் இ.கிரிதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


    Share This Post

Post Comment

Post Comment
webeng

Relative News

அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்த திட்டம்.

அனைத்து ஆசிரியர்களையும் பட்டதாரிகளாக தரம் உயர்த்த திட்டம்.

75 தொலைபேசிகள், 5 மடிகணனிகள், 156,000 ரூபா பணம் பறிமுதல்.

75 தொலைபேசிகள், 5 மடிகணனிகள், 156,000 ரூபா பணம் பறிமுதல்.

சில அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு - அரிசியின் விலைகள் அதிகரிப்பு!

சில அரிசி வகைகளுக்கு தட்டுப்பாடு - அரிசியின் விலைகள் அதிகரிப்பு!

Classifield