The News Sponsor By


The News Sponsor By
பசிக் கொடுமை! மண்ணை அள்ளி அள்ளி தின்ற பச்சிளம் குழந்தைகள்! Thedipaar
 India

பசிக் கொடுமை! மண்ணை அள்ளி அள்ளி தின்ற பச்சிளம் குழந்தைகள்!

 03.12.2019

குடிபோதை தந்தையால் வயிற்றுப் பசிக்கு மண் அள்ளி சாப்பிட்ட குழந்தைகளையும், அவரது தாயையும் கேரள அரசு அரவணைத்துள்ள நெகிழ்ச்சி சம்பவம் நடைபெற்றுள்ளது. கேரளாவில் குடிபோதை கணவரால் 6 குழந்தைகளை பெற்றெடுத்த பெண்ணுக்குத்தான் இந்த அவல நிலை ஏற்பட்டுள்ளது.

கேரளாவின் திருவனந்தபுரம் அடுத்த கைதமுக்கு பகுதியில் உள்ள ரயில்வே புறம்போக்கு நிலத்தில் குப்பைக்கூழங்கள் நிறைந்த பகுதியில் தார் பாயால் தடுப்பு அமைத்து குஞ்சுமோன், ஸ்ரீதேவி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு மொத்தம் 6 குழந்தைகள் உள்ளனர். மூத்த குழந்தைக்கு 7 வயது, கடைசியாக பிறந்த குழந்தைக்கு 3 மாதம்.

கூலித்தொழிலாளியான குஞ்சுமோன் கிடைக்கும் பணத்தை ஒரு ரூபாய் கூட மனைவிடம் தராமல் குடித்து வந்துள்ளார். இதனால் 6 குழந்தைகளுக்கு உணவு அளிக்கமுடியாமல், அதிகபட்ச கொடூரம் 3 மாதக் குழந்தைக்கு பால் கூட வாங்கித் தரமுடியாமல் வறுமையின் விளிம்பில் வாழ்ந்து வந்துள்ளார்.

இந்நிலையில் ஒரு கட்டத்தில் தாயிடம் இருந்து இனி உணவு கிடைக்காது என்று முடிவெடுத்த 2 குழந்தைகள் பசியால் வேறு வழியின்றி மண்ணை அள்ளி தின்றுள்ளன. இதை யாரோ ஒருவர் செல்போனில் படம்பிடித்து வைரலாக்க விஷயம் கேரள அரசின் கதவுகளை தட்டியுள்ளது. இதை வாட்ஸ்ஆப்பில் பார்த்த பலர் கண்கலங்கி பார்வேர்டு செய்தார்களே தவிர உதவி செய்ய யாரும் செல்லவில்லை.

நல்வாய்ப்பாக வைரல் வீடியோ கேரள அரசின் கவனத்திற்கு செல்ல திருவனந்தபுரம் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலருக்கும் தெரிவிக்கப்பட்டது. இந்த வீடியோவை பார்த்து அதிர்ந்து போன அதிகாரிகள் சம்பவ இடத்தை தெரிந்து கொண்டு நேரிடையாக சென்றார்கள். இந்த தகவல் திருவனந்தபுரம் மேயர் ஸ்ரீகுமாருக்கு கொடுக்கப்பட்டது.

பின்னர் அவரும் வந்து தாயின் அனுமதியோடு 2 பெண் குழந்தைகள், 2 ஆண் குழந்தைகளை அரசு காப்பகத்தில் பராமரிப்புக்காக ஒப்படைக்கப்பட்டனர். மற்ற 2 குழந்தைகளும் மிகவும் சிறுவயது என்பதால் தாயின் பராமரிப்பு அவசியம் கருதி அவரிடம் இருக்க முடிவு செய்யப்பட்டது.

மேலும் ஸ்ரீதேவிக்கு மாநகராட்சியில் தற்காலிக வேலையும், மாநகராட்சி குடியிருப்பில் குழந்தைகளுடன் வசிக்க வீடும் ஒதுக்கப்பட்டது. பின்னர் ஸ்ரீதேவியின் கணவர் குஞ்சுமோனை அதிகாரிகள் தேடிப்பிடித்த எச்சரிக்கை செய்தனர்.

Share this news

News Subscription




Comments:-