The News Sponsor By


The News Sponsor By
Mississaugaவில் திருடப்பட்ட டிராக்டர் வாகனம் மோதியதில் ஒருவர் பலி.! Thedipaar
 Canada

Mississaugaவில் திருடப்பட்ட டிராக்டர் வாகனம் மோதியதில் ஒருவர் பலி.!

 13.01.2020

Mississaugaல் டிராக்டர் வாகனம், கார் மீது மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானதுடன் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பீல் பிரந்திய காவல் துறை உதவி காவல் ஆய்வாளர் கூறுகையில், Mavis Road மற்றும் Eglinton Avenue மேற்கு பகுதியில் விபத்து சம்பவித்ததாக எங்களுக்கு அழைப்பு வந்தது.

சம்பவ இடத்துக்கு சென்று நடத்தப்பட்ட விசாரணையில், Eglintonலிருந்து கிழக்கு நோக்கி வந்த அதிவேக ட்ராக்டர் முதலில் ஒரு கார் மீது மோதியுள்ளது. அது தொடர்ந்து எஸ்.யூ.வி ரக கார் மீது மோதியுள்ளது.

மோதலை ஏற்ப்படுத்திய டிராக்டர் வாகனம் கடந்த சில தினங்களுக்கு முன்பு திருடப்பட்டது என்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த விபத்தின் போது டிராக்டர் வாகனத்தை இயக்கி வந்த ஓட்டுனர் விபத்தில் பலியாகி உள்ளார். மோதலால் உருக்குலைத்த காரில் இருந்த இருவர் கவலைக்கிடமான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ட்ராக்டரில் இறைச்சி ஏற்றப்பட்டு வந்ததால், சாலை முழுக்க அவை கொட்டி கிடந்தன. அவற்றை சுத்தம் செய்ய தற்காலிகமாக சாலை மூடப்பட்டது.

Share this news

News Subscription




Comments:-