The News Sponsor By


The News Sponsor By
டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணிப் பெண் பலி. Thedipaar
 Srilanka

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 8 மாத கர்ப்பிணிப் பெண் பலி.

 13.01.2020

டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட 22 வயதுடைய 8 மாத கர்ப்பிணிப் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கிண்ணியா - 3, மாஞ்சோலை பிரதேசத்தில் வசித்து வந்த குறித்த கர்ப்பிணிப் பெண்ணே இவ்வாறு டெங்கு நோய் காரணமாக மரணமானதாக கிண்ணியா பொலிஸார் தெரிவித்தனர் .

22 வயதான எட்டு மாத கர்பிணிப் பெண்ணே இவ்வாறு உயிரிழநடதுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

வயிற்றில் உள்ள சிசு மரணமாணதை தொடர்ந்து கிண்ணியா தள வைத்தியசாலையில் இருந்து திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு குறித்த பெண் மாற்றப்பட்ட நிலையில் இம்மரணம் நிகழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .

இறந்த தாய் மற்றும் எட்டு மாத சிசுவின் நல்லடக்கம் இன்று (13.01.2019) கிண்ணியாவில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share this news

News Subscription




Comments:-