The News Sponsor By


The News Sponsor By
சிக்கல் மேல் சிக்கல் - போயிங் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்பு.! Thedipaar
 World

சிக்கல் மேல் சிக்கல் - போயிங் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரி பொறுப்பேற்பு.!

 14.01.2020

போயிங் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக டேவிட் கால்ஹவுன் (David Calhoun) பொறுப்பேற்றுக் கொண்டார்.

2018 மற்றும் 2019 துவக்கத்தில் நிகழ்ந்த 2 பெரும் விமான விபத்துகளில் 346 பேர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, பல விமான நிறுவனங்கள், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்கள் இயக்குவதை நிறுத்தின.

இதையடுத்து அந்த நிறுவன தலைமை செயல் அதிகாரியான டென்னிஸ் முலென்பர்க் பணி நீக்கம் செய்யப்பட்டு, டேவிட் கால்ஹவுன் நியமிக்கப்பட்டார். இதையடுத்து தலைமை செயல் அதிகாரியாக டேவிட் கால்ஹவுன் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு 1.4 மில்லியன் டாலர் வருடாந்திர சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

737 மேக்ஸ் பிரச்சனையை தீர்த்தால், மேலும் 26 புள்ளி 5 மில்லியன் அமெரிக்க டாலர் தருவதாக அவருக்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

Share this news

News Subscription




Comments:-