The News Sponsor By


The News Sponsor By
பொதுத்தேர்தலை எதிர்கொள்ள கூட்டமைப்புக்குத்தேவை தலைமைத்துவ மாற்றம். Thedipaar
 Srilanka

பொதுத்தேர்தலை எதிர்கொள்ள கூட்டமைப்புக்குத்தேவை தலைமைத்துவ மாற்றம்.

 14.01.2020

இன்றைய நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமைப்பதவிக்கு மிகப்பொருத்தமானவர் பாராளுமன்ற உறுப்பினர் Mathiaparanan Abraham Sumanthiran. அவர்கள்தான். 

அவரால் மாத்திரமே கூட்டமைப்பு என்ற கூட்டினை மேலும் விரிவாக்கி பரந்துபட்ட அறிவார்த்த அரசியலை நோக்கி முன் நகர்த்த முடியும். தூரநோக்கு சிந்தையோடு இரா. சம்பந்தன் ஐயாவினால் கட்சிக்குள் கொண்டுவரப்பட்டவர் M.A சுமந்திரன் அவர்கள்.

அவர் மீது ஆரம்பத்தில் பல விமர்சனங்கள் இருந்தன தேசியப்பட்டியல் மூலம் அவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டமையை சுட்டி பலர் அவரை பின் கதவால் அரசியலுக்கு வந்தவர் என விமர்சித்தனர்.

புன்னகையோடு அதை ஏற்றுக்கொண்ட அவர் அடுத்த தேர்தலில் வடக்கில் இரண்டாவது அதிகூடிய விருப்பு வாக்கினைப்பெற்று முன் கதவாலும் மக்கள் ஆதரவோடும் மாலை மரியாதைகளோடும் என்னால் வரமுடியுமென நிறூபித்தார். 

இன்றைய நாட்களில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தனியொரு குரலாக பாராளுமன்றத்திலும் சர்வதேச மட்டத்திலும் உள்நாட்டிலும் ஒலித்துக்கொண்டிருக்கிறது அவர் குரல். அவர் இல்லாத தமிழர் அரசியல் தமிழர்களின் இருண்டகால அரசியலாகவே இருக்கும். 

தமிழர்கள் பெரும்பான்மையினத்தினரால் அரசியல் ரீதியாகவும் இனரீதியாகவும் ஒடுக்கப்படும் இந்த நேரத்தில் இடம்பெறவுள்ள பொதுத்தேர்தலில் சிறுபான்மையினத்தினர் ஒன்றுபட்ட இனமாக ஒருமித்து ஓரணியில் நிற்கவேண்டிய தேவை இருக்கிறது.

சிறுபான்மையினத்தினரை மேலும் சிறுபான்மையினராக்கி அவர்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை மேலும் சிதைத்து அரசியல் அடையாளம் அற்றவர்களாக மாற்ற முயற்சிக்கும் தெற்கின் பெரும்பான்மை சிந்தனைவாதத்தை எதிர்த்து நிற்க தமிழ் மக்களுக்கு மாத்திரம் அல்ல ஏனைய சிறுபான்மையினத்தினருக்கும் வலுவான ஓர் அரசியல் தலைமைத்துவம் வேண்டும். 

சர்வதேச மட்டத்திலும், இராஜதந்திர ரீதியிலும், அறிவுசார் புலமையிலும், அரசியல் அனுபவத்திலும், சட்டப்புலமையிலும், சமூக நடத்தையிலும் மேன்மையானவராக இருக்கும் கெளரவ பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதான கட்சியான தமிழரசுக்கட்சியின் துணை பொதுச்செயலாளருமான M.A.Sumanthiran அவர்கள் சம்பந்தன் ஐயாவின் முதுமையை கருத்தில் கொண்டு அவரிடமிருந்து அவர் வகிக்கும் கூட்டமைப்பின் தலைமைப்பதவியை ஏற்று கட்சியை முன்னோக்கி கொண்டுசெல்ல முன்வரவேண்டும்.

வடக்கு கிழக்கின் பெரும்பான்மையான இளையோரின் விருப்பத்தெரிவாகவும் சுமந்திரன் அவர்களே உள்ளார்.

அவரின் ஆளுமையினை அவர்கள் ஏற்றுக்கொள்கின்றனர். அவரின்  அறிவார்த்த அரசியலை ஏற்றுக்கொள்கின்றனர். அவரின் பின் அணி திரள தயாராக உள்ளனர்.

காலம் இட்ட கட்டளையென அதை ஏற்றுக்கொண்டு சுமந்திரன் ஐயா அவர்கள் மக்கள் பணியாற்ற வேண்டும். கூட்டமைப்பின் தலைமைப்பதவியென்பது இலவான விடயம் அல்ல ஒரு கட்சியின் தலைமைத்துவம் போன்றதல்ல அது.

தனித்தனி கொள்கைகளோடு இயங்கும் ஏனைய கட்சிகளையும் அரவணைத்துக்கொண்டு அவர்களுக்கும் சம உரிமைகள் வழங்கி ஐக்கியத்தோடு வழிநடத்தவேண்டிய கடினமான பணி அது. அதை செய்யக்கூடிய ஆளுமை சுமந்திரன் அவர்களிடம் மாத்திரமே இப்போது உண்டு. 

Share this news

News Subscription




Comments:-