The News Sponsor By


The News Sponsor By
கொட்டகை வாழ்க்கையுடன் எவ்வித உதவிகளும் அற்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையை காணாது மற்றுமொரு தாயின் உயிரும் பிரிந்தது Thedipaar
 Srilanka

கொட்டகை வாழ்க்கையுடன் எவ்வித உதவிகளும் அற்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையை காணாது மற்றுமொரு தாயின் உயிரும் பிரிந்தது

 21.01.2020

கொட்டகை வாழ்க்கையுடன் எவ்வித உதவிகளும் அற்ற நிலையில் காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளையை காணாது மற்றுமொரு தாயின் உயிரும் பிரிந்த சோகம் கிளிநொச்சியில் நடந்தேறியது.

கிளிநொச்சி மருதநகர் பகுதியில் எவ்வித அடிப்படை வசதிகளும் அற்ற நிலையில் 23 வயதில் இறுதி யுத்த்ததில் பிள்ளையை தொலைத்த தாயின் உயிர் பிரிந்த சம்பவம் 20.01.2020 அன்று பதிவாகியுள்ளது. 

அடிப்படை வசதிகள் எதுவுமற்ற நிலையில் பெத்த பிள்ளையேனும் கிடைக்கும் என்ற எண்ணத்தில் பிள்ளையின் வருகைக்காய் காத்திருந்த தாயான சின்னையா கண்ணம்மா என்ன 77 வயதான இந்த தாய், பிள்ளையையும் காணாது 10 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் எதுவமற்ற வாழ்வினைகழித்து உயிர் நீத்த சம்பவம் கிளிநொச்சி மாவட்டத்தையே சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

23 வயதான தனது கடைசி மகனை் சின்னையா பிரசாந் என்பர் இன்று வருவார், நாளை வருவார் என போராட்டங்களிலும், விசாரணைகளிலும் தேடி அலைந்த நிலையில் தனது 10 ஆண்டு எஞ்சிய காலத்தையும் நிம்மதியற்று கழித்தவளாக கண்ணயர்ந்தாள் கண்ணம்மா. குறித்த தாயின் கணவர் இறந்து ஒரு வருடங்கள் ஆகாத நிலையில், கண்ணம்மாவின் மறைவும் குடும்பத்தை மாத்திரமல்ல பிரதேசத்தை சோகத்திற்கு உள்ளாக்கியுள்ளது.

நிம்மதியாக உறங்குவதற்கு நிரந்தர வீடுகூட அற்ற நிலையில், பிள்ளைகள் மற்றம் உறவினர்களின் சிறு உதவிகளுடன் தனக்கான வருமானத்திற்காக கோவில்களில் கச்சான் விற்று உயரை பிடித்து மகனை தேடிய நிலையில், மகனை காணாதவளாகவே தன்னுயிரை இழந்துள்ளாள் இந்த தாய்.

வெறுமனே வீர வசனங்களை மேடைகளில் பேசியும், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை வைத்து அரசியல் செய்தவர்களும்கூட இந்த தாயாரிற்கு உதவ முன்வந்திருக்கவில்லை. 5 ஆண்டுகளாக அரசுக்கு நிபந்தனை அற்ற ஆதரவினை கொடுத்து, உரிமைக்காகவும், காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளிற்காகவும் போராடும் மக்களை மறந்தவர்களின் கண்களிற்கு இந்த தாயாரின் இருப்பிடத்தைகூட அமைத்துக்கொடுக்க முடியவில்லை.

வெறுமனே தேசியம், சுயநிர்ணயம், அபிவிருத்தி என்ற சொற்பதங்களை அரசியலிற்காகவும், தமது சுய இலாபத்திற்காகவும் பயன்படுத்தியவர்களால், இவ்வாறான தாய்மாரின் வாழ்வு தொடர்பில் கண்டுகொள்ளவில்லை என்பதற்கு இந்த தாயாரின் மறைவு வித்திட்டு காட்டுகின்றது.

புலம்பெயர் நாடுகளிலிருந்து பாதிக்கப்பட்ட மக்களிற்காக நிதிகள் அள்ளி அள்ளி வழங்கப்படுவதாக மார்தட்டிக்கொள்பவர்களும், உண்மையாக பாதிக்கப்பட்ட மக்களிற்காக குறிப்பிட்ட சிலர் ஊடாக வழங்கும் நிதிகள் இவ்வாறான குடும்பங்களை சென்றடையாது புாவதும் தொடர்ந்த வண்ணமாகவே உள்ளது.

உரிமைக்காக குரல் கொடுப்போம் என்று வீர முழக்கமிட்டு அரியாசனம் ஏறியவர்கள் எட்டடி சுற்று மதிலமைக்கும்போது இவ்வாறான குடும்பங்கள் கொட்டகைகூட ஒழுங்கற்று கிடப்பதை கண்டுகொள்ளவில்லை என்பதே நிதர்சனமான உண்மை.

இவ்வாறு பல தாய் தந்தையர்கள் யுத்தத்தினால் தமது பிள்ளைகளை தொலைத்தவர்களாகவும், பிள்ளை உயிருடன் இருக்கின்றாரா இல்லையா என அறியாதவர்களாகவும் எங்சிய காலத்தை நிம்மதியாக கழிக்க முடியாதவர்களாக அன்றாடம் புாராடுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. வெறுமனே வீர வசனங்களால் எம்மினத்தின் விடிவிற்காக உழைக்க முடியாது.

அவர்களின் இன்ப துன்ப மற்றும் வாழ்க்கை முறைகளை முன்னேற்றுவதற்கும், ஏதிலிகளாக வாழும் குடும்பங்களின் வாழ்வினை உயர்த்தாத வரைக்கும் தமிழ் சமூகம் பின்னோக்கியே செல்லும்.

கண்ணம்மா என்ற இந்த தாயின் மரணத்தின் பின்பாகிலும், பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வில் ஒளியேற வேண்டும் என்பதே அனைவரினதும் எதிர்பார்ப்பாகும்.

புலம்பெயர்ந்து வாழ்பவர்களால் கோவில்களின் திருப்பணிகளிற்காகவும், கோபுரங்கள் அமைப்பதற்காகவும் கோடி கோடியாக செலவு செய்யத் நிதிகளை, இவ்வாறு தேசத்தின் விடிவிக்காக தமது பிள்ளைகளை அர்ப்பணித்த தாய்மாரது கண்ணீருக்கு செலவு செய்ய வேண்டும் என்பதே கண்ணம்மா என்ற தாய் எம்முன் விட்டுச்செல்லும் கதையாக அமைகின்றது. 


Share this news

News Subscription
Comments:-