The News Sponsor By


The News Sponsor By
சம்மாந்துறையில் காணி ஒன்றிலிருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு Thedipaar
 Srilanka

சம்மாந்துறையில் காணி ஒன்றிலிருந்து ரீ-56 ரக துப்பாக்கி மீட்பு

 21.01.2020

சம்மாந்துறை பகுதியில் காணி ஒன்றில் புதைத்து கைவிடப்பட்டிருந்த நிலையில் ரீ-56 ரக துப்பாக்கி ஒன்று விசேட அதிரடிப்படையினரால் மீட்கப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரின் புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய இன்று செவ்வாய்க்கிழமை(21) மாலை சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையடிவாரம் பகுதியில் இருந்து குறித்த துப்பாக்கியை மீட்ட விசேட அதிரடிப்படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இவ்வாறு உர பையினுள் சுற்றப்பட்ட நிலையில் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த குறித்த துப்பாக்கி இயங்கு நிலையில் இல்லை என தெரிவிக்கப்பட்டள்ள நிலையில் துப்பாக்கியுடன் இரு ரவைக்கூடுகளும் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this news

News Subscription




Comments:-