The News Sponsor By


The News Sponsor By
"இரு வாரங்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்" முடக்கப்பட்ட 3.6 கோடி மக்கள்! Thedipaar
 World

"இரு வாரங்கள் வீட்டிலிருந்து வெளியே வர வேண்டாம்" முடக்கப்பட்ட 3.6 கோடி மக்கள்!

 25.01.2020

மத்திய சீனாவிலுள்ள வூஹான் மாகாணத்தில் வூஹானிலும் மேலும் 12 நகரங்களிலும் 3.6 கோடி மக்கள் வேறெங்கும் செல்ல முடியாதவாறு முடக்கப்பட்டுள்ளனர்.

வூஹான், ஹூபே மாகாணப் பகுதிகளில் பல்கலைக்கழகங்களில் பயிலும் சுமார் 700 இந்திய மாணவர்களும் சிக்கிக் கொண்டுள்ளனர். இவர்களுடன் உடனுக்குடன் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி ஏற்பாடுகளை இந்தியத் தூதரகம் செய்துள்ளது.

சீனாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள 1,287 பேரில் 237 பேருடைய நிலைமை கவலையளிப்பதாக இருக்கிறது எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா பாதிப்பால் ஹூபே மாகாணத்தைச் சேர்ந்த டாக்டர் ஒருவரும் உயிரிழந்தார்.

கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிப்பதற்காக வூஹான் நகரில் சிறப்பு மருத்துவமனையொன்றை சீனா கட்டுகிறது. இந்த மருத்துவமனையில் ஆயிரம் நோயாளிகள் தங்கிச் சிகிச்சை பெறத் தக்க வசதிகளுடன் இருக்கும்.

Share this news

News Subscription




Comments:-