The News Sponsor By


The News Sponsor By
கரோனா வைரஸ் எதிரொலி... ஆறு நாட்களில் 1000 படுக்கைகளுடன் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை.! Thedipaar
 World

கரோனா வைரஸ் எதிரொலி... ஆறு நாட்களில் 1000 படுக்கைகளுடன் புதிதாக கட்டப்படும் மருத்துவமனை.!

 25.01.2020

சீனா மற்றும் ஹாங்காங்கில் கடந்த 2002 ஆம் ஆண்டில் பரவிய சார்ஸ் நோயை ஏற்படுத்திய அதே வைரஸ் குடும்பத்தை சேர்ந்த வைரஸ் தான் இந்த கரோனா என கூறப்படுகிறது.

சுவாச மண்டலத்தில் கோளாறுகளை ஏற்படுத்தி, கடும் காய்ச்சலை ஏற்படுத்தி மனித உயிர்களை பறிக்கக்கூடிய ஆபத்து உள்ளது இந்த கரோனா வைரஸ். இந்த வைரஸ்கள் பாம்புகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவி இருக்கலாம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சீனாவின் ஹுபெய் மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த இந்த வைரஸ் தற்போது உலகம் முழுவதும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழலில் நோய் பரவலைத் தடுக்க கரோனா வைரஸ் பாதிப்புப் பகுதியிலிருந்து வந்தடைந்த மக்கள், தங்கள் வீட்டிலேயே 14 நாட்கள் தங்குமாறு பெய்ஜிங் அரசு வலியுறுத்தியுள்ளது.

Share this news

News Subscription




Comments:-