The News Sponsor By


The News Sponsor By
பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் இந்திய வாட்ஸ்ஆப் குரூப்! Thedipaar
 India

பாகிஸ்தானுக்கு உளவு பார்க்கும் இந்திய வாட்ஸ்ஆப் குரூப்!

 25.01.2020

வாட்ஸ்ஆப் குரூப் அமைத்து பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பிற்காக 56 இந்தியர்கள் உளவு பார்த்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பாக்., உளவு அமைப்பான ஐஎஸ்ஐ.,க்கு உளவு பார்த்து சொல்வதற்காக ஜிந்தகி நா மிலேகி என்ற பெயரில் வாட்ஸ்ஆப் குரூப்பை சேர்ந்த முகம்மது ரஷித் (23) உ.பி.,யின் சந்தவுலி பகுதியில் பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்தனர்.

பயங்கரவாத பயிற்சி பெற்று வந்த இவர் சிஆர்பிஎப், காசி விஸ்வநாதர் ஆலயம், சங்கத் மோசான் கோயில், மவுலாவி பாலம், முக்கிய ரயில் நிலையங்கள், கன்டோன்மென்ட், விமானப்படை தளங்கள் குறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பாக்.,ன் ஐஎஸ்ஐ.,க்கு தொடர்ந்து அனுப்பி வந்துள்ளார்.

அவரிடம் இருந்து சிம் கார்டை பறிமுதல் செய்த பயங்கரவாத தடுப்பு பிரிவினர், அந்த எண்ணை ஐஎஸ்ஐ.,உடன் பேசுவதற்கு பயன்படுத்தி உள்ளாரா, எத்தகைய தகவல்களை அவர் பகிர்ந்துள்ளார் என்பது பற்றி விசாரித்து வருகின்றனர். வாட்ஸ்ஆப் குழுவில் உறுப்பினராக இருக்க ரஷித்திற்கு ரூ.5000 வரை வழங்கப்பட்டு வந்தது தெரிய வந்துள்ளது.

இது பற்றி பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கூறுகையில், ஐஎஸ்ஐ., உடன் எந்த மாதிரியான தகவல் பறிமாற்றத்தில் ரஷித் ஈடுபட்டான் என்பது பற்றி தெரியவில்லை. ஆனால் இந்த வாட்ஸ்ஆப் குழுவில் 56 இந்தியர்கள் உள்ளது தெரிய வந்துள்ளது. இவர்களில் சிலர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்.

இவர்களின் மொபைல் எண்கள் அந்தந்த மாநில போலீசாருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. ரஷித்தின் உறவினர்கள் சிலரும் இந்த குரூப்பில் உறுப்பினர்களாக இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களிடம் விசாரணை நடத்த உள்ளோம் என்றனர்.

Share this news

News Subscription




Comments:-