The News Sponsor By


The News Sponsor By
தமிழகத்தில் திருப்பூரில் தயாரான ஆடைகள் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடுகளத்தில்.! Thedipaar
 Sports

தமிழகத்தில் திருப்பூரில் தயாரான ஆடைகள் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் ஆடுகளத்தில்.!

 25.01.2020

திருப்பூர் மாவட்டம், பின்னலாடைத் தொழிலில் சர்வதேச ஆர்டர்கள் பெறுவதில் 3-வது இடத்தில் உள்ளது என்றும் இந்தியாவின் பின்னலாடை தயாரிப்புகளில் சுமார் 50 சதவிகிதம் இங்குதான் தயாரிக்கப்படுகிறது என்றும் திருப்பூரில் உள்ள தொழில் அமைப்புகள் கூறுகின்றன.

இந்தியாவின் பின்னலாடைத் தலைநகர் என்று அழைக்கப்படும் திருப்பூரில் தயாரிக்கப்படும் ஆடைகள் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த ஆண்டிற்கான ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் போட்டிகளில் அமைப்பாளர்களுக்கான மேல்சட்டை, பாவாடை மற்றும் கால்சட்டைகள் (T-shirts, Skirts, shorts & jackets) தயாரித்து அனுப்புவதற்கான ஒப்பந்தம் திருப்பூரைச் சேர்ந்த தனியார் பின்னலாடை நிறுவனத்துடன் போடப்பட்டுள்ளது.

இந்த ஆடைகள் அனைத்தும் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்பட்டுத் தூக்கி எறியப்படும் நெகிழிபாட்டில்களை மறுசுழற்சி செய்து, அதில் இருந்து கிடைக்கும் நூலிழைகளைக் கொண்டு (Polyethylene Terephthalate - PET Bottles) தயாரிக்கப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆம் ஆண்டிற்கான ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டி ஜனவரி 20ஆம் தேதி முதல் பிப்ரவரி 2ஆம் தேதி வரை, ஆஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகரில் நடைபெற்றுவருகிறது.

Share this news

News Subscription




Comments:-