The News Sponsor By


The News Sponsor By
ரொறன்ரோவில் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான தமிழ் மாணவி - கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை.! Thedipaar
 Canada

ரொறன்ரோவில் கொலைவெறி தாக்குதலுக்கு ஆளான தமிழ் மாணவி - கவலைக்கிடமான நிலையில் தீவிர சிகிச்சை.!

 25.01.2020

ரொறன்ரோவில் தமிழ் மாணவி மர்மநபரால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

தமிழகத்தில் குன்னூரைச் சேர்ந்த ராச்சல் ஆல்பெர்ட் என்ற மாணவி டொராண்டோ நகரில் உள்ள யார்க் பல்கலைக்கழகத்தில் முதுகலை பட்டப்படிப்பு பயின்று வருகிறார். கடந்த புதன்கிழமை இரவு பல்கலைக் கழகம் அருகே நடந்து சென்ற ராச்சலை வழிமறித்த மர்மநபர் கத்தியால் குத்தியதில் மாணவி படுகாயமடைந்தார்.

கழுத்துப் பகுதியில் கத்தியால் குத்தப்பட்டதுடன் துப்பாக்கியால் சுடப்பட்டதும் தெரியவந்துள்ளது. உடன்படிக்கும் சக மாணவர் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணை நடைபெற்றுவருகிறது.

சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் இந்தச் செயலைச் செய்தவர் 5 அடி 11 அங்குலம் இருக்கக்கூடிய ஆண் என்றும், ஆசியாவைச் சேர்ந்தவர் என்றும் கருப்பு நிற உடை அணிந்திருந்ததாகவும் தெரிவித்ததாக காவல் துறை தெரிவித்துள்ளது. உயிருக்கு ஆபத்தான நிலையில் ராச்சலுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



Share this news

News Subscription




Comments:-