The News Sponsor By


The News Sponsor By
கனடாவில் கொரோனா வைரஸ் அறிகுறியா.? கனேடிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்! Thedipaar
 Canada

கனடாவில் கொரோனா வைரஸ் அறிகுறியா.? கனேடிய சுகாதார அமைச்சகம் வெளியிட்ட தகவல்!

 25.01.2020

கொரோனா வைரஸின் அறிகுறிகள் இருப்பதாக சந்தேகிக்கப்பட்டு கனடாவில் சிலர் கண்காணிக்கப்படுவதாக கனடிய சுகாதார அமைச்சர் தெரிவித்தார். இதனால் கனடியர்களுக்கான ஆபத்து குறைவாகவே உள்ளதாகவும் கூறினார்.

கனடாவில் ஐந்து அல்லது ஆறு பேர் கண்காணிக்கப்படுவதாக தெரிவித்த அவர் இதில் குறைந்தபட்சம் வான்கூவரில் ஒருவர் மற்றும் மற்றொருவர் கியூபெக்கில் உள்ளதாக உறுதிப்படுத்தினார்.

இந்த நோயைக் கண்டறிந்து அடுத்த கட்ட நடவடிக்கைகளைத் தீர்மானிக்க மத்திய அரசு சர்வதேச பங்காளிகளுடன் இணைந்து செயல்படுவதாக கனடிய சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமது மாகாணத்தில் ஐந்து பேர் கண்காணிப்பில் உள்ளதாக கியூபெக்கின் பொது சுகாதார அதிகார சபையின் தலைவர் தெரிவித்தார். இவர்கள் ஐவரும் அணமையில் சீனாவுக்குப் பயணம் செய்திருந்ததாகவும் அவர் கூறினார்.<      </div>

       

Share this news

News Subscription




Comments:-