The News Sponsor By


The News Sponsor By
கிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை செய்த கணவரும் தற்கொலை முயற்சி. Thedipaar
 Srilanka

கிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை செய்த கணவரும் தற்கொலை முயற்சி.

 25.01.2020

கிளிநொச்சியில் 24 வயது பெண்ணை வெட்டி கொலை செய்த கணவரும் தற்கொலை முயற்சி.

கணவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்ற வருவதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் நள்ளிரவு 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரமந்தனாறு பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் கிளிநொச்சி மயில்வாகனபுரம் பகுதியை சேர்ந்த சுகந்தன் சகுந்தலா என்ற 24 வயதுடைய பெண்ணே சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதாகவும் சுகந்தன் என்பவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் பொலிசார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,

குறித்த இருவரும் 5 வருடங்களிற்கு முன்னர் திருமணமாகியுள்ளனர்.

கடந்த சில மாதங்களிற்கு முன்னர் இருவருக்கும் இடையில் காணப்பட்ட குடும்ப முரண்பாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்துள்ளனர்.

குறித்த பெண் தனது சிறிய தாயாரின் வீட்டில் தங்கியிருந்து வேலைக்கு சென்று வந்துள்ளார்.

கிளிநொச்சி பச்சிலைப்பள்ளி பிரதேச சபையில் ஓரிரு மாதங்களிற்கு முன்னர் இவர் வேலையில் இணைந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இருவரும் தொலைபேசியில் உரையாடியுள்ளதாகவும், தொலைபேசி உரையாடலில் இருவருக்கும் இடையில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளதாகவும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.

இரவு சம்பவம் இடம்பெற்ற வீட்டுக்கு வருகை தந்த பெண்ணின் கணவர் பெண்ணை அழைத்து அவரை வெட்டியதுடன், தன்னையும் வெட்டி தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார். 

குறித்த சம்பவத்தை அறிந்த உறவினர்கள் வருகை தந்து வைத்தியசாலையின் உதவியை நாடியுள்ளனர்.

சம்பவ இடத்திற்கு வந்த வைத்திய சாலை நோயாளர் காவு வண்டியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த பெண்ணின் கணவரையும், வெட்டுக்காயங்களிற்கு உள்ளாகிய பெண்ணின் மற்றுமொரு சகோதரியையும் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி தர்மபுரம் பொலிசார் முன்னெடுத்த வருகின்றனர்.


Share this news

News Subscription




Comments:-