The News Sponsor By


The News Sponsor By
துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 19 பேர் பலி. Thedipaar
 World

துருக்கியில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்: 19 பேர் பலி.

 25.01.2020

துருக்கியில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 19பேர் உயிரிழந்ததோடு, 600இற்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருவதாக நாட்டின் பேரிடர் மற்றும் அவசரநிலை மேலாண்மை தெரிவித்துள்ளது.

எலாசிக் மாகாணத்தில் 13 பேர், மாலத்யாவில் நான்கு பேர், தியர்பாகீரில் ஒருவர் மற்றும் மற்றொரு பகுதியில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.

கிழக்கு எலாசிக் மாகாணத்தில் உள்ள சிவ்ரிஸ் நகருக்கு அருகே 6.7 ரிக்டர் அளவிலல் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

குறித்த நிலநடுக்கத்தின் போது சுமார் 10 கட்டடங்கள் இடிந்து விழுந்ததாக துருக்கி உட்துறை அமைச்சர் சுலிமான் சோய்லு தெரிவித்தார்.

இடிந்து விழுந்த கட்டடத்திலிருந்து காயமடைந்தவர்களை அவசர குழுவினர் மீட்பதால், இதன் உயிரிழப்பு மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை கூடுமென அமைச்சர் சுலிமான் சோய்லு அச்சம் வெளியிட்டுள்ளார்.

மேலும், எலாசிக் நகரில் காணாமல் போன 30 பேரை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் நடைபெற்று வருவதாகவும் சோய்லு தெரிவித்தார்.

Share this news

News Subscription




Comments:-