The News Sponsor By


The News Sponsor By
கொரோனா வைரஸ் : சீன மாணவர்கள் மீது வார்த்தைத் துஷ்பிரயோகம். Thedipaar
 World

கொரோனா வைரஸ் : சீன மாணவர்கள் மீது வார்த்தைத் துஷ்பிரயோகம்.

 12.02.2020

பிரித்தானியாவில் உள்ள சீன மாணவர்கள், அதிகரித்துவரும் இனவாதத் துஷ்பிரயோகத்தை தாம் எதிர்கொள்வதாகக் கூறுகின்றனர்.

மேலும் வீதியில் செல்லும்போது தம்மைப் பார்த்துப் பலர் “கொரோனா வைரஸ்” என்று கூச்சலிட்டதாகக் கூறியுள்ளனர்.

பேர்மிங்கமில் உள்ள சீன சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பேஸ்புக் செய்தியைப் பெற்றனர்.

அதில் “நீங்கள் அருவருப்பான, காட்டுமிராண்டித்தனமான விலங்குக் கொடுமை செய்பவர்கள் என்றும் நீங்கள் அனைவரும் வைரஸைப் பெறத் தகுதியானவர்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

கார்டிஃப் நகரில் உள்ள சீன மாணவர்கள் தாம் விரிவுரைகளுக்குச் செல்லும்போது துஷ்பிரயோக வார்த்தைகளை எதிர்கொண்டதாக ஸ்கை நியூஸிடம் தெரிவித்துள்ளனர்.

முதுகலைப் பட்டதாரி மாணவர் ரொபின் ஜாங் கூறுகையில்;

நானும் எனது நண்பி லூசி ஜுவும் ஒன்றாக நடந்து சென்று கொண்டிருந்தபோது நான்கு பேர் வாசலுக்கு அருகில் நின்றுகொண்டு “ஏய் கொரோனா வைரஸ்” என்று கூச்சலிட்டனர்.

அவர்கள் தங்களது மூக்கு மற்றும் வாயை சட்டையின் கொலர் மூலம் மூடி சைகை செய்து கொண்டிருந்ததுடன் சத்தமாகச் சிரித்தனர் என்று தெரிவித்தார்.

அவரது நண்பி லூசி ஜு கூறுகையில்; எனக்கு மிகவும் கவலையாக உள்ளது.

அந்த நேரத்தில் எப்படி நடந்துகொள்வது என்று எனக்குத் தெரியவில்லை.

வைரஸ் என்பது எல்லோரும் எதிர்கொள்ள வேண்டிய ஒரு பிரச்சினை என்று நான் நினைக்கிறேன்.

மக்கள் ஒன்றாகச் சேர்ந்தால் வைரஸுக்கு எதிராக போராடமுடியும் என்று கருதுகிறேன் என்று தெரிவித்தார்.

பிரித்தானியாவில் ஒரு மருத்துவர் உட்பட எட்டுப்பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் உலகளவில் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள நிலையில், சீனாவில், 45,000 க்கும் மேற்பட்ட வைரஸ் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அங்கு இதுவரையில் இறப்புகளின் எண்ணிக்கை 1,100 ஆக அதிகரித்துள்ளது.


Share this news

News Subscription




Comments:-