The News Sponsor By


The News Sponsor By
உத்தரபிரதேசத்தில் மாணவியை பாலியல்வன்முறைக்கு உட்படுத்திய நபர் தந்தையை சுட்டுக்கொன்றார். Thedipaar
 India

உத்தரபிரதேசத்தில் மாணவியை பாலியல்வன்முறைக்கு உட்படுத்திய நபர் தந்தையை சுட்டுக்கொன்றார்.

 13.02.2020

இந்தியாவில் 15வயது மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தியதாக குற்றம்சாட்டப்பட்ட நபர் தந்தையை சுட்டுக்கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் பிரோஜாபாத்தில் இடம்பெற்றுள்ளது.

பாலியல் வன்முறைக்குள்ளான 15 வயது மாணவியை தந்தை வீடு திரும்பிக்கொண்டிருந்தவேளை குற்றவாளியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

குற்றவாளி தனக்கு எதிரான வழக்கை மீளப்பெறாவிட்டால் கொலை செய்துவிடுவேன் என மிரட்டல் விடுத்துவந்தார் என கொல்லப்பட்டவரின் குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் கடந்த வருடம் 15 வயது மாணவியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்தினார் ஆனால் அவரை காவல்துறையினர் இன்னமும் கைதுசெய்யவில்லை என குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

குற்றம்சாட்டப்பட்ட நபர் தனக்கு எதிரான வழக்கை வாபஸ் பெறுமாறு குறிப்பிட்ட குடும்பத்தவர்களை தொடர்ந்து மிரட்டி வந்துள்ளார், ஐந்து நாட்களிற்குள் வழக்கை வாபஸ் பெறாவிட்டால் உங்கள் குடும்பத்தை சேர்ந்த ஒருவரை கொலை செய்வேன் என அவர் எச்சரித்தார்.

நாங்கள் காவல்துறையினரிடம் தெரிவித்தோம் அவர்கள் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என பாதிக்கப்பட்ட குடும்பத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை இந்த சம்பவத்தை தொடர்ந்து பணியை சரிவரச்செய்ய தவறிய குற்றச்சாட்டின் கீழ் மூன்று காவல்துறையினர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யபட்டுள்ளனர்.

இந்தியாவில் சட்டமொழுங்கு மோசமானதாக காணப்படும் மாநிலமாக உத்தரபிரதேசம் காணப்படுவதுடன் பெண்களிற்கு எதிரான வன்முறைகள் அதிகமாக இடம்பெறும் பகுதியாகவும் அது காணப்படுகின்றது.

2018 இல் இதே மாநிலத்தின் உனாவோவில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்ட பெண்ணின் தந்தை காவல்துறை அலுவலகத்தில் வைத்து அடித்துக்கொல்லப்பட்ட சம்பவம் இடம்பெற்றது இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது

Share this news

News Subscription




Comments:-