The News Sponsor By


The News Sponsor By
கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் அறை திறப்பு. Thedipaar
 Srilanka

கிளிநொச்சி பொதுச்சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் அறை திறப்பு.

 14.02.2020

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையினால் பொதுச்சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் அறை இன்று (14-02-2020) மாவட்ட அரசாங்க அதிபர் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபை க்குட்பட்ட கிளிநொச்சி பேருந்து 
நிலையம் மற்றும் பொதுச்சந்தை ஆகியவற்றின்  பல்வேறு தேவை களுக்காக வரும் பாலூட்டும் தாய்மார்களின் நன்மை கருதி கரைச்சி பிரதேச சபைனால் பொதுச்சந்தை வளாகத்தில் அமைக்கப்பட்ட தாய்ப்பாலூட்டும் அறை இன்று (14-02-2020) பகல் 10மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர்ரூபவதி கேதீஸ்வரன் அவர்களால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்வில் பிரதேச சபையின் தவிசாளர் அ.வேழமாலிகிதன், சபை உறுப்பினர்கள், பிரதேச சபையின் செயலாளர் கா.சண்முகதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Share this news

News Subscription




Comments:-