The News Sponsor By


The News Sponsor By
45 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நால்வர் கைது. Thedipaar
 Srilanka

45 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களுடன் நால்வர் கைது.

 14.02.2020

45 இலட்சம் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுக்களை சட்ட விரோதமாக இலங்கைக்கு கடத்திய நால்வர் இன்று கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சிகரெட்டுக்களை துபாயிலிருந்து கொண்டு வந்த கண்டி - அஸ்கிரிய பகுதிகயை சேர்ந்த 30 வயதுடைய திருமணமான தம்பதிகளும், அபுதாபியிலிருந்து விமானத்தினூடாக வந்திறங்கிய அம்பலாங்கொடையைச் சேர்ந்த 40 வயதுடைய ஆணொருவரும் அதே விமானத்தில் வந்த மாத்தளையைச் சேர்ந்த 40 வயதான பெண்ணொருவரும் இவ்வாறு கைது செய்யப்ட்டமை குறிப்பிடத்தக்கது.

சந்தேக நபர்கள், மத்திய கிழக்கு நாடுகளில் தயாரிக்கப்பட்ட 4 வகையான 90,800 சிகரெட்டுக்கள் அடங்கிய 454 பெட்டிகளை, 8 பயணப் பொதிகளுக்குள் மறைத்த நிலையில் இலங்கைக்கு கொண்டு வந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை சுங்கத் திணைக்களம் முன்னெடுத்து வருகின்றது.

Share this news

News Subscription




Comments:-