The News Sponsor By


The News Sponsor By
ஜேர்மனியில் மர்மநபர்கள் துப்பாக்கிபிரயோகம்- எட்டு பேர் பலி. Thedipaar
 World

ஜேர்மனியில் மர்மநபர்கள் துப்பாக்கிபிரயோகம்- எட்டு பேர் பலி.

 20.02.2020

ஜேர்மனியின்பிராங்போர்ட் நகரில் இடம்பெற்ற இரு துப்பாக்கி பிரயோகங்களில் எட்டுபேர் கொல்லப்பட்டுள்ளனர்.

இதனை உறுதி செய்துள்ள காவல்துறையினர் காரில் தப்பிச்சென்றுள்ள கொலையாளிகளை துரத்திப்பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர்.

ஹனாவு நகரிலேயே இந்த துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன.

அந்த பகுதியில் அம்புலன்ஸ்களையும் காவல்துறை ஹெலிக்கொப்டர் ஒன்றையும் காணமுடிவதாக ரொய்ட்டர் செய்தி வெளியிட்டுள்ளது.

முதலாவது துப்பாக்கி பிரயோகம் மதுபானசாலையொன்றில் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள காவல்துறையினர் இனந்தெரியாத எண்ணிக்கையானவர்கள் இந்த தாக்குதலுடன் தொடர்புபட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

Share this news

News Subscription




Comments:-