The News Sponsor By


The News Sponsor By
நிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி? Thedipaar
 India

நிர்பயா குற்றவாளி தற்கொலை முயற்சி?

 20.02.2020

நிர்பயா குற்றவாளிகளின் சந்தேகநபர்களில் ஒருவரான வினய் சர்மா, திகார் சிறையில் சுவற்றில் தலையை மோதிக்கொண்டதால் காயம் ஏற்பட்டுள்ளது.

நிர்பயா குற்றவாளிகளுக்கு மார்ச் 3ஆம் திகதி தூக்கு தண்டனை நிறைவேற்ற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தண்டனையை இரத்து செய்யவும் தள்ளிப் போடவும் குற்றவாளிகள் பலமுறை முயற்சித்தும் அவை அனைத்தும் தோல்வியடைந்தன.

இந்நிலையில் திகார் சிறையில் தடுத்துவைக்கப்பட்டிருந்போது வினய் சர்மா, சுவரில் தனது தலையை மோதியதால், காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, சிறை அதிகாரிகள் உடனடியாக அவரை வைத்தியசாலையில் அனுமதித்தனர்.

இதற்கு முன்னர் சிறையில் உள்ள கிரிலில் தனது கையை கொடுத்து, எலும்பு முறிவு ஏற்படுத்த முயற்சி செய்ததாகவும் கூறப்படுகிறது.

இச்சம்பவம் பெப்ரவரி 16ஆம் திகதி நடந்ததாகவும் இது குறித்து வினய்யின் தாய் கேட்டபோதும் அவர் அதை கண்டுகொள்ளவில்லை எனவும் தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கான புதிய திகதி அறிவிக்கப்பட்டது முதல் அவரது மனநிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வினய் சர்மாவின் வழக்கறிஞர் ஏ.பி.சிங் தெரிவித்தார்.

ஆனால் சிறை மூத்த அதிகாரிகள் கூறுகையில், “சமீபத்தில் நடத்தப்பட்ட மனநிலை சோதனையில் 4 பேரும் நலமாக உள்ளனர். ஆனால் புதிய திகதி அறிவிக்கப்பட்டது முதல் குற்றவாளிகள் 4 பேரும் சிறை காவலர்களிடம் கடுமையாக நடந்து வருகின்றனர்.

அவர்களின் செயற்பாடுகளில் மாற்றம் வந்துள்ளது. மற்றவர்களுடன் பேசுவதை குறைத்துக்கொண்டுள்ளனர். உணவு சாப்பிட மறுத்து வருவதால், அவர்களை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்து வருகிறோம்.

குற்றவாளிகள் 4 பேரும் தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்பதற்காக அவர்களின் அறையில் சி.சி.ரி.வி கமரா பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணித்து வருகிறோம்” என தெரிவித்துள்ளனர்.

பெற்றோர்களை மட்டும் சந்திக்க அனுமதிக்கப்படுவதாகவும் சில சமயங்களில் அவர்களை சந்திக்கவும் குற்றவாளிகள் மறுத்து விடுவதாகவும் சிறை நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் மூர்க்கதனமாக நடந்துகொள்வதும் தங்களை காயப்படுத்திகொள்வதும் வழமையானதே என கூறப்படுகிறது.

ஒருவேளை குற்றவாளிகளுக்கு காயம் ஏற்பட்டாலோ, எடை குறைந்தாலோ அவர்கள் உடல்நலம் தேறும் வரை தண்டனை நிறைவேற்றுவது தள்ளி போகும் என சிறைத்துறை தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனால் வினய் சர்மா தற்கொலை முயற்சியில் ஈடுபட்டாரா, முரட்டுத்தனமாக தன்னை தானே காயப்படுத்திக்கொண்டாரா அல்லது தண்டனையை தள்ளிப்போடுவதற்காக இவ்வாறு செய்தாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

Share this news

News Subscription




Comments:-