The News Sponsor By


The News Sponsor By
கொரோனா: வீட்டு மருத்துவம் என்ற பெயரில் மக்கள் விபரீதத்தை கையில் எடுக்க வேண்டாம்! Thedipaar
 Canada

கொரோனா: வீட்டு மருத்துவம் என்ற பெயரில் மக்கள் விபரீதத்தை கையில் எடுக்க வேண்டாம்!

 25.03.2020

பிரான்சின் தென்கிழக்கில் முதன்முதலில் கொரோனா நோய்த்தொற்றுக்கு ஆளான 24 நோயாளிகளுக்கு குளோரோகுயின் என்ற மருந்து மூலம் சிகிச்சை அளிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களுக்கு ஒரு நாளைக்கு 600 எம்சிஜி வழங்கப்பட்டு மருந்தின் தன்மை மற்றும் பக்க விளைவுகள் ஆகியவை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

பின் பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் இருப்பதை கண்டறிய முடிந்தது. மேலும் குளோரோகுயின் என்ற மருந்து பொதுவாக மலேரியாவைத் தடுப்பதற்கும் சிகிச்சையளிப்பதற்கும் முக்கியமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்நிலையில் கொரோனாவிற்கான தடுப்பு மருந்தாக குளோரோகுயினை பயன்படுத்தலாம் என அமெரிக்கா முடிவு செய்துள்ளது. அதற்கான ஆய்வுகளும் நடத்த திட்டமிட்டதாகவும் கூறப்படுகிறது.

இருந்தாலும், மலேரியாவுக்கான மருந்தை கொரோனாவுக்கு பயன்படுத்தும் பட்சத்தில், அது விரும்பத்தகாத பக்க விளைவுகள் ஏற்படுத்தும் என கனேடிய மருந்தியல் நிபுணரான Dr. David Juurlink என்பவர் தெரிவித்துள்ளார்.

ஆய்வு ஒன்றில், 36 கொரோனா நோயாளிகளுக்கு மலேரியா மருந்தை கொடுத்து ஆராய்ந்தபோது, அதில் பல பெரிய பிரச்சினைகள் உள்ளது தெரியவந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதய துடிப்பில் பிரச்சினை, குறைந்த இரத்த அழுத்தம் மற்றும் மனோவியல் பிரச்சினைகள் ஆகிய பக்கவிளைவுகள் அந்த மருந்தால் ஏற்படலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.


Share this news

News Subscription




Comments:-