Published:Category:

ஸ்காபுரோவில் அதீத கரிசனை தரும் கோவிட் தொற்று! தமிழர்களின் பாதிப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு!!

#MIvDC

ஸ்காபுரோவில் அதீத கரிசனை தரும் கோவிட் தொற்று! தமிழர்களின் பாதிப்பு தொடர்ந்தும் அதிகரிப்பு!!

கோவிட்-19 வைரஸ் தொற்று நிலைமை ஒன்ராரியோவில் தீவிரமடைந்துவரும் நிலையில், தமிழர்கள் அதிகம் வதியும் ரொரன்ரோ மாநகரின் ஸ்காபுரோவில் உள்ள 17 போஸ்டல் கோட் (Postal Code) பகுதிகளில், 6 பகுதிகள் அதிகரித்த கரிசனை தரும் தொற்றுப் பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன. 

இதில் 5 பகுதிகளில் தமிழ் மக்கள் சொந்த வீடுகளிலும், அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் அதிகம் வசித்து வருகின்றனர். இப்பகுதிகளிலும் அதிக தமிழ் மக்களும் கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருப்பமை ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில், ஸ்காபுரோவில் வாழும் தமிழ் மக்களுக்கு மேலும் அவதானமாக இருப்பதற்காக இத்தகவல் எடுத்து வரப்படுகிறது.

கீழே அந்த ஆறு பகுதிகளும் அடையாளம் காணப்பட்டுள்ளன. அடைப்புக்குறிக்குள் உள்ள சதவீதம் பொசிட்டிவிட்டியைக் குறிக்கும். அதாவது இப்பகுதிகளில் இருந்து கோவிட் சோதனைக்கு தம்மை உட்படுத்தியவர்களில், 100 பேரில் எத்தனை பேர் கோவிட் தொற்றுடையவர்களாக அடையாளம் காணப்பட்டனர் என்பதை அது குறிக்கும். 

ஸ்காபுரோ வைத்தியசாலைகளிலேயே, ரொரன்ரோ பெரும் பாகத்தில் உள்ள வைத்தியசாலைகளுடன் ஒப்பிடுமிடத்து, அதிக கோவிட் தொற்றுள்ள நோயாளிகள் அனுமதிக்கப்பட்டள்ளதாக ஒரு உள்ளகத்தகவல் தெரிவிக்கிறது. வைத்தியசாலைகள் துரிதகதியில் நிறைந்துவரும் நிலையில், நோயாளிகள் விரைவில் ஏனைய பகுதி வைத்தியசாலைகளுக்கு அனுப்பப்பட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

M1X (14.7%)   ரொரன்ரோவில் அடையாளம் காணப்பட்ட 22 பகுதிகளில் 3ஆம் இடம் - ஒன்ராரியோவில் அதிக தொற்றுடைய 50 பகுதிகளில் 8ஆம் இடம். இப்பகுதியில் தமிழர்கள் தமது சொந்த வீடுகளில் பெரும் எண்ணிக்கையில் வாழ்கின்றனர். ஸ்ரெயின் வீதியையும் (Staines Road) அதன் சுற்றுப்புறத்தையும் பெருமளவில் உள்ளடக்கியது. கனடாவிலேயே அதிக தமிழர் வாழும் பகுதியையும் உள்ளடக்கியது என்றால் அது மிகையில்லை. இப்பகுதியும் அடுத்துவரும் இணைந்த பகுதியுமே அதிக தமிழர் வாழும் பகுதிகளாகும். இப்பெரும் பகுதிகளின் கனடிய மற்றும் ஒன்ராரியோ பாராளுமன்ற உறுப்பினர்கள் வேறு தமிழர்கள் தான்.

M1B (12.6%)  ரொரன்ரோ 7ஆம் இடம் - ஒன்ராரியோ 17ஆம் இடம். இது தமிழர்கள் அதிகம் வதியும் மெல்வன் பகுதியை உள்ளடக்கியது. இப்பகுதியிலும் அதிக தமிழர்கள் சொந்த வீடுகளிலும் அடுக்குமாடி குடியிருப்புகளிலும் பெருமளவில் வாழுகின்றனர். 
 
M1G (11.6%)  ரொரன்ரோ 8ஆம் இடம் - ஒன்ராரியோ 23ஆம் இடம். இங்கு தமிழர்களுக்கு நன்கு பரீச்சியமான தமிழர்கள் வதியும் Tuxedo Courts அடுக்குமாடி குடியிருப்புகளை உள்ளடக்கியது. 

M1M (8.8%) ரொரன்ரோ 18ஆம் இடம் - ஒன்ராரியோ 42ஆம் இடம். இதுவே ஸ்காபுரோவில் அடையாளம் காணப்பட்டுள்ள 6 பகுதிகளில் தமிழர்கள் குறைவாக வதியும் பிரதேசம். இங்கு சில அடுக்குமாடிக் குடியிருப்புகளில் வாழுகின்றனர்.

M1J (8.3%) ரொரன்ரோ 21ஆம் இடம் - ஒன்ராரியோ 48ஆம் இடம். இப்பகுதி மார்க்கம் - எக்லிங்டனை சுற்றியுள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகளிலும் மற்றும் பெலாமி வீதியை மையப்படுத்திய வீடுகளில் தமிழர்கள் வாழுகின்றனர்.

M1P (8.1%) ரொரன்ரோ 22ஆம் இடம் - ஒன்ராரியோ 50ஆம் இடம். மேற்க்கண்ட ஆறு பகுதிகளில் தமிழ் மக்கள் அதிகம் வதியும் மூன்றாம் பகுதி இது எனலாம். கெனடி - எல்மெயர் சந்திப்பிற்கு அருகில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புகள் மற்றும் பெருமளவிலான வீடுகளில் தமிழ் மக்கள் வாழும் பகுதியாகும்.

மேற்க்கண்ட பகுதிகளின் துல்லியமான எல்லைகளை கீழ்வரும் படத்தில் நீங்கள் காணலாம். அதனைக் கருத்தில் கொண்டு இப்பகுதியில் வாழும் தமிழ்மக்கள் அதீத கவனத்துடனும் அதேவேளை ஏனைய பகுதிகளில் உள்ள மக்களும் இன்றைய நிலையைக் கருத்தில் கொண்டு கவனத்துடனும் நடந்து கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் உள்ளவர்களைத் தவிர ஏனைய எவரையும் சந்திப்பதை தவிர்த்துக் கொள்ளுமாறு ஒன்ராரியோ அரசு வேறு வலியுறுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகளுக்கு..
Published:Category:

கிளிநொச்சியில் ஐவருக்கு covid - 19 தொற்று உறுதி.

#MIvDC

கிளிநொச்சியில் ஐவருக்கு covid - 19 தொற்று உறுதி.

Published:Category:

ரொறன்ரோ மக்களுக்கு எச்சரிக்கை - மீறினால் குறைந்தபட்சம் $ 10,000 டொலர் அபராதம் செலுத்த வேண்டி வரும்!

#MIvDC

ரொறன்ரோ மக்களுக்கு எச்சரிக்கை - மீறினால் குறைந்தபட்சம் $ 10,000 டொலர் அபராதம் செலுத்த வேண்டி வரும்!

Published:Category:

ரொறன்ரோ Adamson BBQ மூட உத்தரவு! அவசர கால விதிகளை மீறியது அம்பலம்!

#MIvDC

ரொறன்ரோ Adamson BBQ மூட உத்தரவு! அவசர கால விதிகளை மீறியது அம்பலம்!

Published:Category:

கனடாவின் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட முக்கிய மாகாணம் - கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அமல்!

#MIvDC

கனடாவின் சுகாதார அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்ட முக்கிய மாகாணம் - கடுமையான புதிய கட்டுப்பாடுகள் அமல்!

Published:Category:

முன்னெச்சரிக்கை நடவடிக்கை! சென்னை விமான நிலையம் மூடப்பட்டது!

#MIvDC

முன்னெச்சரிக்கை நடவடிக்கை! சென்னை விமான நிலையம் மூடப்பட்டது!

Published:Category:

தமிழகம், புதுச்சேரியில் இதுவரை 37,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!

#MIvDC

தமிழகம், புதுச்சேரியில் இதுவரை 37,000 மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்!

Published:Category:

உச்சகட்ட உஷார் நிலையில் தமிழகம்! கரையை தொட்டு வலுபெற்றது புயல்!

#MIvDC

உச்சகட்ட உஷார் நிலையில் தமிழகம்! கரையை தொட்டு வலுபெற்றது புயல்!

Published:Category:

இந்தியாவில் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி!

#MIvDC

இந்தியாவில் முதல் கட்டமாக மருத்துவ பணியாளர்கள் ஒரு கோடி பேருக்கு தடுப்பூசி!

Published:Category:

கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை!

#MIvDC

கடந்த 3 வாரங்களில் 9 ஆஸ்திரேலிய ராணுவத்தினர் தொடர்ச்சியாக தற்கொலை!

Published:Category:

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை! அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

#MIvDC

பாலியல் குற்றங்களில் ஈடுபடுபவர்களுக்கு ஆண்மை நீக்க தண்டனை! அறிவிப்பை வெளியிட்ட நாடு எது தெரியுமா?

bottem fooder