யாழில் புரெவிப் புயல் : மூவரைக் காணோம்! 1589 பேர் பாதிப்பு.
யாழில் புரெவிப் புயல் : மூவரைக் காணோம்! 1589 பேர் பாதிப்பு.
வங்காள விரிகுடாவில் உருவான புரெவிப் புயல் இன்று பின்னிரவில் நாட்டின் கிழக்குத் திசையிலிருந்து திருகோணமலைக்கும் முல்லைத்தீவுக்கும் இடையே கரையைக் கடந்து, கடுங்காற்றுடன் அனர்த்தங்களை விளைவித்தபடி வவுனியாவைத் தாண்டி முன்னேறி மன்னாரைக் கடந்து தமிழகத் திசையை நோக்கி நகர்ந்தது.
இந்தப் புயல் வடமாகாணங்களைப் புரட்டிப் போட்டுள்ளது. குறிப்பாக யாழ் மாவட்டத்தில் அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தொடர்ச்சியாக பெய்துவரும் கடும் மழை மற்றும் காற்று காரணமாக யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போதுவரை 459 குடும்பங்களை சேர்ந்த 1589 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட அனர்த்த முகாமைத்து பிரிவின் உதவிப் பணிப்பாளர் ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.
அத்தோடு வேலணை பகுதியை சேர்ந்த 2 பேர் மற்றும் சங்கானை பகுதியை சேர்ந்த ஒருவர் என மொத்தமாக 3 பேர் காணாமல் போயுள்ளதாகவும், 3 நபர்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளாதாகவும், ரீ.என்.சூரியராஜா மேலும் தெரிவித்துள்ளார்.
யாழ் மாவட்டத்தில் 15 வீடுகள் முழு அளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், 141 வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாகவும், இதுவரை 4 இடைத்தங்கல் முகாம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக சண்டிலிப்பாய், சாவகச்சேரி மற்றும் பருத்தித்துறை பகுதியிலேயே அதிகமான வீடுகள் பகுதியளவில் சேதம் ஏற்பட்டுள்ளதாக ரீ.என்.சூரியராஜா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
மேலும், மருதங்கேணி பிரதேச செயலாளர் பிரிவில் மட்டும் 167 குடும்பங்களைச் சேர்ந்த 523 அங்கத்தவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பருத்தித்துறையில் 58 குடும்பங்களைச் சேர்ந்த 206 பேரும், வேலணையில் 23 குடும்பங்களைச் சேர்ந்த 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தங்களது உறவினர்கள் வீட்டில் தங்கியுள்ளனர் எனவும் , கல்லுண்டாய் பகுதியில் ஓர் இடைத்தங்கல் முகாமும் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.

ஜனாதிபதி ஆணைக்குழு முழுமையான கேலிக்கூத்து.
பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.

பொதுசன வாக்கெடுப்பினைக் கோர இதுவே தருணம்.
கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.

கொரோனா தொற்றுக்குள்ளான கைதி ஒருவர் மரணம்.
முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.

முல்லைத்தீவில் தாலி கட்டும் நேரத்தில் மாப்பிள்ளை பிடிக்கவில்லை எழுந்து சென்ற மணப்பெண்.
99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!

99.9 சதவீத கொரோனாவை கொல்லும் - கனேடிய நிறுவனம் அபார சாதனை!
ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!

ஒன்ராறியோ முன்னாள் மூத்த ஊழியர் 11 மில்லியன் டாலர் COVID-19 நிதி மோசடி!
பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!

பதவி விலகிய கவர்னர் ஜெனரல் ஜூலி பேயட் இடத்தை யார் நிரப்புவார்? பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் கருத்து!
கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!

கனடா திரும்ப முடியாத நிலை கூட வரலாம் - சுற்றுலா செல்ல விரும்பும் கனேடியர்களுக்கு பிரதமரின் முக்கிய அறிவிப்பு!
அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.

அனுமதியின்றி தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள்.
100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!

100 இற்கும் அதிகமான வைத்தியர்களுக்கு கொரோனா!