ட்ரம்பின் உத்தியோகபூர்வ யூடியூப் சனல் தற்காலிகமாக முடக்கம்.
ட்ரம்பின் உத்தியோகபூர்வ யூடியூப் சனல் தற்காலிகமாக முடக்கம்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் உத்தியோகபூர்வ யூடியூப் சனல் தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்பின் பேஸ்புக், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் ஆகிய சமூகவலைத்தள கணக்குகள் கடந்த வாரம் முடக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
"வன்முறைக்கான சாத்தியக்கூறுகள்" இருப்பதன் காரணமாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப்பின் சனலை தற்காலிகமாக முடக்கியதாக யூடியூப் நிர்வாகம் நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதியின் சமூகவலைத்தளங்களை கட்டுப்படுத்திய பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் யூடியூப்பும் ஒன்றாகும்.
இது தொடர்பாக யூடியூப்பின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில்,
கூகுளுக்குச் சொந்தமான வீடியோ தளமான யூடியூப், ட்ரம்ப்பின் சமீபத்திய வீடியோக்களில் ஒன்று, பரவலான தேர்தல் மோசடி எனக் கூறி தவறான தகவல்களை பரப்பும் உள்ளடக்கத்தை தடைசெய்யும் கொள்கையை மீறியதை அடுத்து, சுமார் 2.8 மில்லியன் சந்தாதாரர்களைக் கொண்ட சேனலில் குறைந்தது ஏழு நாட்களுக்கு புதிய உள்ளடக்கத்தை பதிவேற்ற தடை செய்துள்ளது. யூடியூப் வீடியோ குறித்த கருத்துகளை காலவரையின்றி முடக்குவதாகவும் தெரிவித்துள்ளது.
எந்த வீடியோ அவரது கணக்கை இடைநிறுத்த தூண்டியது என்பது உடனடியாகத் தெரிவிக்கப்படவில்லை.
ட்ரம்பின் சமூகவலைத்தளங்களை முடக்க பல தொழில்நுட்ப நிறுவனங்கள் நகர்ந்துள்ளன, ஏனெனில் அவரது ஆதரவாளர்களின் வன்முறைக் கும்பலால் கடந்த வாரம் அமெரிக்க பாராளுமன்றம் அமைந்துள்ள கபிட்டல் கட்டிடத்தொகுதியை தாக்கப்பட்டது.
இதன் பின்னர், டுவிட்டரைத் தொடர்ந்துபேஸ்புக் நிறுவனம் ஜனாதிபதியின் முக்கிய சமூகவலைத்தளம் மற்றும் இன்ஸ்டாகிராமில் இருந்து இடைநீக்கம் செய்தது.
இதனால் அவருக்குப் பிடித்த சமூகவலைத்தளங்களை இழந்துள்ளார்.
ஸ்னாப்செட், ரெடிட் மற்றும் ட்விச் போன்ற பிற சமூகவலைத்தளங்களும் ட்ரம்பிற்கு தடைவிதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிடமிருந்து மேலும் 30 இலட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய திட்டம்.

இந்தியாவிடமிருந்து மேலும் 30 இலட்சம் தடுப்பூசிகளை கொள்வனவு செய்ய திட்டம்.
கிளிநொச்சி தட்டுவன்கொட்டியில் அமையவுள்ள சிவன் சிலைக்கான அடிக்கல் நாட்டல்.

கிளிநொச்சி தட்டுவன்கொட்டியில் அமையவுள்ள சிவன் சிலைக்கான அடிக்கல் நாட்டல்.
இன்று வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி.

இன்று வடமாகாணத்தில் 15 பேருக்கு தொற்று உறுதி.
நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு

நாட்டில் கொரோனா மரணங்களின் எண்ணிக்கை மேலும் உயர்வு
பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை!

பலஸ்தீன இளைஞனை சுட்டுக்கொன்றது இஸ்ரேலிய படை!
ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு!

ரம்யா பாண்டியன் நடிக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு!
வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை.

வெதுப்பக உணவுப் பொருட்களின் விலைகளை அடுத்த மாதம் முதல் அதிகரிக்க நடவடிக்கை.
இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்.

இலங்கைக்கு இரத்த தான அம்சத்தை அறிமுகப்படுத்திய பேஸ்புக்.
யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்துவைப்பு.

யாழ்ப்பாணம் நெடுந்தூர பேருந்து நிலையம் திறந்துவைப்பு.
நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி; கொள்வனவிலும் நியாய விலை இல்லை; கவலையில் கிளிநொச்சி விவசாயிகள்!

நெல் அறுவடையில் பாரிய வீழ்ச்சி; கொள்வனவிலும் நியாய விலை இல்லை; கவலையில் கிளிநொச்சி விவசாயிகள்!