கொவிட் சடலங்களில் இருக்கும் வைரஸ் உயிரற்றவை.
கொவிட் சடலங்களில் இருக்கும் வைரஸ் உயிரற்றவை.
கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்களை பல வாரங்கள் அதி குளிர்சாதனங்களில் வைத்திருந்த நிலையில் அவற்றில் பீ.சீ.ஆர். பரிசோதனை மேற்கொண்டு பார்க்கும்போது வைரஸ் தொற்று இருப்பதாகவே காண்பிக்கும்.
என்றாலும் அவை உயிருள்ள நிலையில் இருக்காது என பாராளுமன்ற உறுப்பினரும் வைரஸ் தொடர்பான விசேட நிபுணருமான பேராசிரியர் திஸ்ஸ விதாரண தெரிவித்தார்.
கொவிட் தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களில் சடலங்கள் அதி குளிர்சாதனங்களில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சில வாரங்கள் சென்று பீ.சிஆர். பரிசோதனை மேற்கொண்டாலும் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாகவும் அதனால் அடக்கம் செய்வது அச்சுறுத்தலான விடயம் எனவும் ஒருசிலரால் தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
அதிகுளிர்சாதனங்களில் பல வாரங்கள் இருக்கும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணித்தவர்களின் சடலங்களில் இருந்து பெறப்படும் மாதிரிகளை பரிசோதித்து பாக்கும்போது, அதில் கொரோனா வைரஸ் இருக்கலாம். என்றாலும் அவை உயிருள்ளதாக இருக்காது.
அதனால் மரணித்தவர்களின் சடலங்களில் இருந்து வைரஸ் பரவுவதற்கு வாய்ப்பில்லை.
அத்துடன் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகிய நபரிடமிருந்து, ஆரோக்கியமான ஒருவருக்கு வைரஸ் பரவுவதாக இருந்தால், உயிருள்ள வைரஸ் குறிப்பிடத்தக்களவு பரிமாறிக்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் நோய் தொற்று ஏற்படுவது குறைவாகும்.
மேலும் கொரோனா தொற்றுக்குள்ளாகி மரணிப்பவரின் சடலத்தில் உயிருள்ள வைரஸ் பல மணிநேரங்கள் இருக்கலாம். என்றாலும் அந்த சடலங்களை அடக்கம் செய்த பின்னர், நீருடன் கலந்து வைரஸ் பரவுவதாக விஞ்ஞான ரீதியில் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
அதனால் சடலங்களில் இருக்கும் வைரஸ் தொடர்பாக தேவையற்ற பீதியை ஏற்படுத்திக்கொள்ள தேவையில்லை என்றார்.
கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!
ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!
கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.
கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!
தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு
மீண்டும் நடிக்க வரும் நதியா!

மீண்டும் நடிக்க வரும் நதியா!
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!
புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி