Published:Category:

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 270.

#MIvDC

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் பலியானோர் எண்ணிக்கை 270.

கொரோனா வைரஸ் தொற்றினால் கடந்த 24 மணித்தியாலங்களில் மேலும் அறுவர் உயிரிழந்துள்ள நிலையில், அவர்கள் தொடர்பான முழுமையான விபரத்தினை அரசாங்கத் தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பு 3 ஐச் சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 17 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா மற்றும் நீரிழிவு தீவிரமடைந்தமை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு 15 ஐச் சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 15 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது, மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா என குறிப்பிடப்படுகிறது.

இதேவேளை, முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய ஆண் ஒருவர் முதியோர் இல்லத்தில் கடந்த 15ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் 19 நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்த 65 வயதான ஆண் ஒருவர் களுத்துறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட  நிலையில், கடந்த 14 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா, இதய நோய் மற்றும் நீரிழிவு தீவிரமடைந்தமை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெஹிவளையைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவர் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்றுவந்த நிலையில் கொவிட்19 தொற்று உறுதியானவராக அடையாளம் காணப்பட்டார்.

அதன்பின்னர் அவர் இரணைவில் கொரோனா சிகிச்சை மையத்திற்கு மாற்றப்பட்ட நிலையில், கடந்த 18ஆம் திகதி உயிரிழந்தார்.

கொவிட் 19 தொற்றினால் ஏற்பட்ட நிமோனியா நிலையே அவரது மரணத்திற்கான காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதவிர, இரத்தினபுரி பகுதியை சேர்ந்த 65 வயதுடைய ஆண் ஒருவர் இரத்தினபுரி ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதனையடுத்து அவர், ஹோமாகம பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் கடந்த 18 ஆம் திகதி உயிரிழந்தார்.

அவரது, மரணத்திற்கான காரணம் கொவிட்19 நிமோனியா என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இதுவரை நாட்டில் பதிவான மொத்த கொரோனா மரணங்களின் எண்ணிக்கை 270 ஆக உயர்வடைந்துள்ளது

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

#MIvDC

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

Published:Category:

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

#MIvDC

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

Published:Category:

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

#MIvDC

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

Published:Category:

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

#MIvDC

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

Published:Category:

முக்கியமான போட்டியில்  பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

#MIvDC

முக்கியமான போட்டியில்  பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

Published:Category:

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

#MIvDC

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

Published:Category:

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

#MIvDC

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

Published:Category:

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

#MIvDC

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

Published:Category:

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

#MIvDC

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

Published:Category:

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

#MIvDC

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

  • Thedipaar