கலாபக்காதலன் அடித்துக் கொலை : காதலி மற்றொரு காதலனுடன் கைது!
கலாபக்காதலன் அடித்துக் கொலை : காதலி மற்றொரு காதலனுடன் கைது!
வாணியம்பாடி அருகே 17 வயதுச் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த காதலனை, அடித்துக் கொலைசெய்து சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றில் வீசியதாக காதலியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த வெள்ளக்குட்டை நிம்மையம் பட்டு சாலையில் உள்ள விவசாயக் கிணற்றில், சாக்கு மூட்டையில் கட்டி வீசப்பட்ட சடலத்தை கைப்பற்றிய காவல்துறையினர், கொலை சம்பவம் தொடர்பாக விசாரணையை முன்னெடுத்தனர்.
விசாரணையில் அடித்து கொலை செய்யப்பட்டு சாக்கு மூட்டையில் கட்டி கிணற்றுக்குள் சடலமாக வீசப்பட்டவர் ஆலங்காயம் பெத்தூரை சேர்ந்த நாகராஜ் என்பது தெரியவந்தது. அவரது செல்போன் அழைப்புகளை ஆய்வு செய்த போது, கணவனை இழந்த பெண்ணான கோகிலாவுடன் பேசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து கோகிலாவிடம் நடத்திய விசாரணையில் நாகராஜ் கொலையின் மர்மம் விலகியது. கணவரை இழந்து வாழும் கோகிலாவுக்கு 2 மகள்கள் மற்றும் 2 மகன்கள் உள்ள நிலையில் 8 ஆண்டுகளாக நாகராஜிடம், காதலுடன் பழகி வந்துள்ளார்.
இதனை சாதகமாக்கிய நாகராஜ், வயதிற்கு வந்த கோகிலாவின் இரு மகள்களிடமும் தனது சேட்டையை தொடங்கி இருக்கிறான். கோகிலா பலமுறை எச்சரித்தும் நாகராஜ் திருந்தாமல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில் கோகிலா தன்னுடன் தொழிற்சாலையில் பணிபுரியும் வெங்கடேசனிடம் இது தொடர்பாக கூறியுள்ளார். ஏற்கனவே கோகிலா உடன் தொடர்பில் இருந்த வெங்கடேசன் காதலிக்காக, நாகராஜை தீர்த்துக் கட்ட சம்மதித்துள்ளான்.
சம்பவத்தன்று வெங்கடேசனும், கோகிலாவும் சேர்ந்து நாகராஜை மது அருந்த செய்து கல்லால் அடித்து கொலை செய்துள்ளனர். பின்னர் சடலத்தை சாக்கு மூட்டையில் கட்டி விவசாய கிணற்றில் வீசிச்சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான தடயங்களை சேகரித்த காவல்துறையினர் கோகிலாவையும் அவளது 2 வது காதலன் வெங்கடேசனையும் கொலை வழக்கில் கைது செய்தனர்.
ஏற்கனவே தந்தை இறந்த நிலையில் தாயும் ஜெயிலுக்கு சென்றுவிட்டதால் கோகிலாவின் மகள்கள் மற்றும் மகன்கள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது
நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!
“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்
அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!
உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்

உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்