மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.
மருத்துவக் கல்லூரி மாணவி மர்மமான முறையில் உயிரிழப்பு.
திருச்சி மாவட்டம், சமயபுரம் சுங்கச்சாவடி அருகே தனியார் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை விடுதி உள்ளது.
இக்கல்லூரியில் அரியலூர் மாவட்டம், கருப்பூர் பொய்யூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ராமையாவின் மகள் ராஜேஸ்வரி டி-பாஃம் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். மாணவி ராஜேஸ்வரி இம்மாதம் 17-ம் தேதி தனது வீட்டிலிருந்து கல்லூரிக்கு வந்துள்ளார்.
திங்கள் கிழமை இரவு 1 மணி வரை கல்லூரி விடுதியில் உள்ள தனது சக தோழிகளுடன் நன்றாகப் பேசியுள்ளார். அதிகாலையில் மாணவி ராஜேஸ்வரி விடுதியில் காணவில்லை என சக மாணவிகள் கல்லூரி நிர்வாகத்திடம் கூறியுள்ளனர்.
கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்தில் வந்து பார்த்தபோது விடுதியின் தரைப்பகுதியில் மர்மமான முறையில் சடலமாகக் கிடந்துள்ளார். மாணவி உயிரிழந்தது குறித்து அவரது பெற்றோருக்கு கல்லூரி நிர்வாகத்தினர் தகவல் கூறியதன் பேரில், மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.
மேலும் உயிரிழந்த மாணவியின் கழுத்து நெரிக்கப்பட்டு, முகத்தாடையிலும், தொடைப் பகுதியிலும் கத்தியால் குத்திய காயங்கள் இருந்துள்ளது. இதனால் மாணவி ராஜேஸ்வரியின் சாவில் மர்மம் உள்ளதெனக் கூறி மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மருத்துவக் கல்லூரி முன் போராட்டம் நடத்த முயன்றனர்.
சம்பவ இடத்திற்கு வந்த திருச்சி மத்திய மண்டல காவல்துறை ஐஜி மற்றும் போலீஸார் மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினருடன் பேசினர்.
சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் முறையாகப் புகார் அளித்தால் உரிய விசாரணை நடத்திடுவோம் என ஐஜி கூறினார். அதன் பேரில் சமயபுரம் காவல் நிலையத்தில் மாணவியின் தந்தை ராமையன், தனது மகள் சாவில் மர்மம் உள்ளதெனப் புகார் கூறினார்.
அதன் பேரில் போலீஸார் வழக்குப் பதிந்து, மாணவியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.

இந்தியாவைப் பகைக்காது 13 ஐ நீக்கவே புதிய அரசியலமைப்பு.
பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!

பேருந்து சாரதிகளாக பணி புரியும் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள்!
வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.

வவுனியாவில் இரு குழுக்களுக்கிடையே மோதல். அறுவர் வைத்தியசாலையில் அனுமதி.
கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.

கடந்த 24 மணிநேரத்தில் ஆயிரத்துக்கு மேற்பட்டோர் நாட்டுக்கு வருகை.
முக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.

முக்கியமான போட்டியில் பும்ரா இல்லாமல், இந்திய அணி களமிறங்கவுள்ளது.
தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.

தடுப்பூசிக்காக மூத்த குடிமக்கள் தற்போது இணையத்தில் விண்ணப்பிக்கலாம்.
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்

இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த தயார் என்கிறார் பாகிஸ்தான் பிரதமர்
எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்

எண்ணெய் கசிவின் காரணத்தை கண்டுபிடிக்க கிரேக்கத்திற்கு ஆராச்சியாளர்களை அனுப்பும் இஸ்ரேல்
இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.

இலங்கை அரசை ICC க்கு பாரப்படுத்த வலியுறுத்தி சுழற்சிமுறை உணவுத் தவிர்ப்பு போராட்டம் - யாழ் நல்லூரில் ஆரம்பம்.
விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!

விஜய் சேதுபதி, உண்மையில் ஆண்ட்ரியாவிற்காகவா திண்டுக்கல் சென்றார்!