டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!
டீ கடைக்குள் நுழைந்த டாட்டா ஏஸ் வாகனம்: 2 பேர் பலி, 5 பேர் படுகாயம்!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்து சின்னவரிகம் கிராமத்தில் ஆம்பூரில் இருந்து பேரணாம்பட்டு நோக்கி டாட்டா ஏஸ் வாகனம் ஒன்று சென்றது. இளங்கோ என்பவர் ஓட்டிக்கொண்டு சென்றார்.
இளங்கோவின் கட்டுப்பாட்டை இழந்த டாட்டா ஏஸ் வாகனம் சாலையில் தாறுமாறாக ஓடிய இரண்டு இரு சக்கர வாகனங்கள், ஒரு மிதிவண்டி மீது மோதியதோடு அருகில் இருந்த டீ கடைக்குள் நுழைந்து விபத்து ஏற்படுத்தியது.
இந்த விபத்தில் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துவிட்டு ஆம்பூருக்கு இருசக்கர வாகனத்தில் குடும்பத்தோடு வீடு திரும்பிக்கொண்டிருந்த ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த மகேஷ்பாபு என்பவரின் மகன் 4 வயது சிறுவன் மணிமாறன் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்த ஆம்பூர் கஸ்பா பகுதியைச் சேர்ந்த கணேஷ், கோகுல், தினேஷ் ஆகியோர் படுகாயமடைந்தனர். சாலை ஓரமாக மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஜோசப் என்பவர் படுகாயம் அடைந்தார்.
டீக்கடையில் நின்றுகொண்டிருந்த பெரியவரிகம் கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணி மற்றும் டீக்கடை உரிமையாளர் வேண்டா ஆகியோர் மீதும் டாட்டா ஏஸ் வாகனம் மோதியது. இதில் சுப்பிரமணி சிகிச்சை பலனின்றி ஆம்பூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார்.
படுகாயம் அடைந்த 5 பேரையும் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் வேலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
டாட்டா ஏஸ் வாகன ஓட்டுநர் பாலூர் பகுதியைச் சேர்ந்த இளங்கோவனை கைது செய்து உமராபாத் காவல் நிலைய காவல்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவராக சாலிய பீரிஸ் தெரிவு
முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது

முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனான சந்திப்பு உறுதியானது
நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!

நன்றி பாராட்டும் வரலட்சுமி சரத்குமார்!
“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!

“அன்பிற்கினியாள்“ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியீடு!
வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை

வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் செயலாளர் லீலாதேவி ஆனந்தநடராஜா பயங்கரவாத தடுப்பு பிரிவனர் விசாரணை
கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் செயற்பாடுகளும் சுகாதார பணியாளர்கள் இன்மையால் முடக்கம்
அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு

அம்பாறை பிராந்தியத்தில் பொலிஸார் மேற்கொண்ட திடீர் சோதனை-117 பேருக்கு சட்ட நடவடிக்கை எடுப்பு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் யாழ்ப்பாணம் பொதுசன நூலகத்திற்கு விஜயம்!
உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்

உளுந்து உற்பத்தியாளர்களுக்கு கமக்காரர் சம்மேளனத்தின் அறிவுறுத்தல்