கனடாவின் ரியல் ஹீரோக்கள் தமிழர்கள் - தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் பிரதமர் புகழாரம்!
கனடாவின் ரியல் ஹீரோக்கள் தமிழர்கள் - தமிழ் மரபுத் திங்கள் நிகழ்வில் பிரதமர் புகழாரம்!
கனடாவில் ஜனவரி மாதம், தமிழ் பாரம்பரிய மாதமாக கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த முறை பெருந்தொற்று காரணமாக கொண்டாட்ட நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்ட நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் Gary Anandasangaree முயற்சியில், மெய்நிகர் தமிழ் பாரம்பரிய மாத விழா நடைபெற்றது.
ஸ்கார்பாரோ ரூஜ் பார்க் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கரி ஆனந்தசங்கரி ஏற்பாடு செய்த “தை பொங்கல் மற்றும் தமிழ் மரபுத் திங்கள்” கொண்டாட்டத்தில் கனடிய பிரதமர் ஜஸ்டின் ரூடோ கலந்துக் கொண்டார்.
மெய்நிகர் நிகழ்வாக நடைபெற்ற இன்றைய கொண்டாட்டத்தில் அமைச்சர் அனிதா ஆனந்த், ரொறொன்ரோ நகர முதல்வர் ஜான் டோரி ஆகியோரும் உரையாற்றினர்.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனடாவை கட்டியெழுப்பியதில் தமிழர்களின் மகத்தான பங்கு குறித்து பேசினார்.
அப்போது உரையாற்றிய அவர், இந்த தமிழ் பாரம்பரிய மாதம், கனடியர்களை கடற்கரை முதல் கடற்கரை வரை பாதுகாப்பாக வைத்திருக்க கோவிட்-19 தொற்றுநோயால் இவ்வளவு தியாகம் செய்த அனைத்து தமிழ்-கனடிய முன்னணி மற்றும் அத்தியாவசிய பணியாளர்களுக்கும் நாங்கள் அஞ்சலி செலுத்துகிறோம்.
கனடாவின் வளர்ச்சியில் தமிழர்கள் மாபெரும் பங்களிப்பை அளித்துள்ளனர். நாட்டின் அரசியலிலும், கொள்கை வகுப்பதிலும் பல்வேறு தியாகங்களை செய்துள்ளனர். ஈழத்தில் இடம்பெற்ற இனப்படுகொலை தொடர்பிலான நிகழ்வுகளை கனடா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
இடர்கள் பல கடந்து தமிழ் சமூகம் உலக அளவில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி, கமலா ஹாரிஸ் வளர்ச்சியை வைத்தே, தமிழ் சமூகத்தின் வேகத்தை உலகம் அறிந்துகொள்ள முடியும். தமிழர்கள் நிஜ ஹீரோக்கள். இந்த பெருந்தொற்று காலத்திலும், பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.
மற்ற மரபு திங்கள் கொண்டாட்டம் போல இந்த முறை பொது நிகழ்வு எதுவும் இல்லைஎன்றாலும், ஜனவரி மாதம் தமிழ் சமூகத்துக்கானதாகும். இதனை உணர்வுப்பூர்வமாக கடைபிடிப்போம்" என பேசியுள்ளார்.
வீடியோ இணைப்பு: https://youtu.be/ypA8l7kKnm8
சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு

சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்
மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்

இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்
15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.

15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.
ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு
நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு
நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு