Published:Category:

கையொப்பமிடுபவர்களுக்கான யோசனையை முன்மொழிந்தவர் சுமந்திரனே.

#MIvDC

கையொப்பமிடுபவர்களுக்கான யோசனையை முன்மொழிந்தவர் சுமந்திரனே.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 46ஆவது கூட்டத்தொடருக்காக தமிழ் அரசியல் கூட்டுக்கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புக்களினால் அனுப்பி வைக்கப்பட்டுள்ள முதலாவது பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்களின் தலைவர்கள் கையொப்பம் இட்டால் போதுமானது என்ற யோசனையை வவுனியாவில் வைத்து முன்மொழிந்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே என்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம்  தெரிவித்துள்ளார். 

ஐ.நா.வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பொது ஆவணத்தில் அரசியல் கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள், சிவில் அமைப்புக்கள், மற்றும் மதத்தலைவர்கள் ஆகியோரே கையொப்பம் இட்டுள்ளனர். 

இந்நிலையில் அரசியல் கட்சிகள் மற்றும் நேரடிச் சாட்சியங்கள் இந்தக் கடிதத்தில் உள்ளீர்க்கப்படாமையால் சர்ச்சைகள் ஏற்படுத்தப்பட்டிருந்த நிலையில் எம்.ஏ.சுமந்திரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலமே அரசியல் கூட்டுக்கட்சிகளின் தலைவர்கள் மட்டும் கையொப்பம் இட்டால் போதுமானது என்ற யோசனையை வவுனியாவில் வைத்து முன்வைத்ததாகவும், அதனை தான் ஆமோதித்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். 

எனினும், அந்தக் கருத்தினை கஜேந்திரகுமார் பொன்னம்பலம் முழுமையாக மறுத்துள்ளார். அது தொடர்பில் அவர் அளித்துள்ள பதிலளிப்பில், 

வவுனியா கூட்டத்தில் இலங்கையின் பொறுப்புக்கூறல் விடயம் சம்பந்தமான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பான இணக்கப்பாடு எடுக்கப்பட்டதன் பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரனே, கூட்டுக் கட்சிகளின் தலைவர்களும், சிவில் அமைப்புக்களும் மட்டும் கையொப்பம் வைத்தால் போதுமானது என்று குறிப்பிட்டார். 

அச்சமயத்தில், அரசியல் தரப்பினரான நாம் மக்களின் பிரதிநிதிகள் ஆனால் நேரடியாக பாதிக்கப்பட்ட, இனப்படுகொலையின் சாட்சியங்களாக இருப்பவர்களையும், தமிழ் அரசியல் கைதிகள் சார்ந்த தரப்பினையும் உள்ளீர்த்து அவர்களின் கையொப்பத்தினை பெறுவதால் நாம் அனுப்பும் ஆவணம் மேலும் வலுவாகும் என்று நான் உடனேயே வலியுறுத்தினேன். 

ஆனால், அந்த யோசனை மறுதலிக்கப்பட்டது. வவுனியாகூட்டத்தில் அந்த விடயத்திற்கு யாரும் சாதமான நிலைமையை வெளிப்படுத்தியிருக்கவில்லை. 

இந்நிலையில் கொழும்பில் நடைபெற்ற ஆறாம் திகதி கூட்டத்தின் போதும் கையொப்ப விவகாரத்தினை வெளிப்படுத்தி ஏற்கனவே வவுனியாவில் நான் தெரிவித்த விடயங்களை மீண்டும் குறிப்பிட்டேன். 

இருப்பினும் முடிவில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படவில்லை. இந்நிலையில் பொது ஆவணத்திற்கான வரைவு தயாரிக்கப்பட்டு இறுதியான தருணத்தில் விக்னேஸ்வரன் யார் யார் கையொப்பம் இடப்போகின்றார்கள் என்று மின்னஞ்சலில் கேள்வி எழுப்பினார். 

அதன்போது ஏற்கனவே வவுனியாவிலும், கொழும்பிலும் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை குறிப்பிட்டு கையொப்பங்களை விரைவாக பெறுமாறு கோரினேன். அதன்போது விக்னேஸ்வரனே சம்பந்தனின் கையொப்பத்தினை முதலில் பெற வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார் என்றார். 

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

#MIvDC

கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

Published:Category:

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

#MIvDC

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

Published:Category:

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

#MIvDC

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

Published:Category:

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

#MIvDC

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

Published:Category:

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

#MIvDC

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

Published:Category:

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

#MIvDC

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

Published:Category:

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

#MIvDC

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

Published:Category:

மீண்டும் நடிக்க வரும் நதியா!

#MIvDC

மீண்டும் நடிக்க வரும் நதியா!

Published:Category:

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

#MIvDC

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

Published:Category:

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

#MIvDC

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

  • Thedipaar