பாணந்துறை வடக்கு பகுதியில் மீனவர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்தமை தொடர்பில் சந்தேக நபரொருவரை கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, பாணந்துறை வடக்கு பொலிஸ் பிரிவில் பள்ளிமுல்ல பகுதியில், கடந்த திங்கட்கிழமை முற்பகல் 10 மணியளவில் மூவர் பயணித்த முச்சக்கரவண்டியின் மீது, மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத நபர்கள் இருவர் துப்பாக்கி சூட்டை மேற்கொண்டிருந்தனர்.
இதன்போது கெமுணுமாவத்தை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய மீனவர் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பில் இரு பொலிஸ் குழுக்களும், புலனாய்வு பிரிவின் குழுவொன்றும் விசாரணைகளை முன்னெடுத்து வந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பில் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சம்பவ தினத்தன்று உயிரிழந்த நபருடன் முச்சக்கர வண்டியில் பயணித்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கொலையானது மிகவும் திட்டமிட்ட முறையில் இடம்பெற்றுள்ளதாகவே விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.
எனினும் மோட்டார் சைக்கிளில் வந்து துப்பாக்கிச் கூட்டை நடத்திய சந்தேக நபர்களை கைது செய்வதற்காக தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
பொலிஸாரின் விசாரணைகளுக்கமைய சம்பவ இடத்திலிருந்து 4 ரி 56 ரக துப்பாக்கி தோட்டாக்கள் மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு

சவூதி அரேபியா குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளதாக ஜோ பைடன் அறிவிப்பு
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது: பிரித்தானிய ஆய்வில் தகவல்
மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு

மன்னார் இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர் தெரிவு
பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பைஃஸர் மருந்தின் ஒரு டோஸ் கொரோனா வைரஸ் பரவும் அபாயத்தை குறைக்கிறது என்று பிரித்தானியா நடத்திய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்

இலங்கை அணியின் தலைவராக எஞ்சலோ மெத்தியூஸ்
15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.

15 வருடத்துக்கு பின்னர் நடிக்க வருகிறார் நடிகை ஜெத்மலானி.
வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.

வீதி அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட பருத்தித்துறை மருதங்கேணி வீதி நிர்மான வேலைகள் முழுமையடயமையினால் மக்கள் விசனம்.
ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்

ஓ மணப் பெண்ணே” – முதல் பாடலை வெளியிட்டார் தனுஷ்
இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு

இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இரண்டு குண்டுகள் எக்ஸிடெரில் கண்டுபிடிப்பு
நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு
நாளொன்றுக்கு 46 கிகாவோட் மின்சாரம் தேவைப்படுவதாக மின்சக்தி அமைச்சு தெரிப்பு