இடம்பெயர்ந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்!
இடம்பெயர்ந்த பறவைகளுக்கு பறவைக் காய்ச்சல்!
இந்தியாவில் ஜனவரி 27 வரை, ஒன்பது மாநிலங்களில் (கேரளா, ஹரியாணா, மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா, சத்திஸ்கர், உத்தராகண்ட், குஜராத், உத்தரப்பிரதேசம், பஞ்சாப்) உள்ள பண்ணை பறவைகளிலும், 12 மாநிலங்களில் (மத்திய பிரதேசம், ஹரியாணா, மகாராஷ்டிரா, சத்திஸ்கர், இமாச்சல பிரதேசம், குஜராத், உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், டெல்லி, ராஜஸ்தான், ஜம்மு காஷ்மீர், பஞ்சாப்) காகம்/ இடம்பெயர்ந்த/காட்டு பறவைகளிலும் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன.
மகாராஷ்டிராவின் நந்தத், சோலாப்பூர், புனே அகமதுநகர், புல்தானா, அகோலா, நாசிக், ஹிங்கோலி ஆகிய மாவட்டங்களிலும், குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்திலும், சத்திஸ்கரின் தம்தாரி மாவட்டத்திலும் பண்ணை பறவைகளில் பறவை காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டன.
உத்தராகண்ட் (ருத்ரபிரயாக் வன பிரிவு), ஜுனாகட் மாவட்டத்தின் (குஜராத்) டிட்டர் ஆகிய பகுதிகளில் காகங்களிலும், பீடின் (மகாராஷ்டிரா) மயிலிலும் பறவை காய்ச்சல் நோய் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், சத்திஸ்கர், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், குஜராத்தில் உள்ள பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பண்ணைப் பறவைகள் தவிர இதர பறவை இனங்கள் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளிலும் கண்காணிப்புப் பணிகள் தொடர்ந்து நடைபெறுகின்றன.
பண்ணைப் பறவைகள், முட்டைகள், பறவை தீவனம் போன்றவற்றின் இழப்பால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு செயல் திட்டத்தின்படி மாநில அரசுகள் நிவாரணம் வழங்கிவருகின்றன. இந்திய அரசின் மத்திய கால்நடை, பால்வளத்துறை, 50:50 என்ற பங்கு விகிதத்தில் மாநிலங்கள்/ யூனியன் பிரதேசங்களுக்கு நிதி உதவியை வழங்கி வருகின்றது.
பறவை காய்ச்சல் 2021-ன் தயார்நிலை, கட்டுப்பாடு மற்றும் தடுப்புக்கான திருத்தப்பட்ட செயல்திட்டத்தின்படி தாங்கள் எடுத்து வரும் நடவடிக்கைகள் குறித்து அனைத்து மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களும் தினமும் தகவல்களை வழங்கி வருகின்றன.
கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!
ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!
கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.
கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!
தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு
மீண்டும் நடிக்க வரும் நதியா!

மீண்டும் நடிக்க வரும் நதியா!
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!
புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி