தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களே பொறுப்பு.
தடுப்பு மருந்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அவர்களே பொறுப்பு.
கொரோனா தடுப்பூசியை சுகாதார ஊழியர்கள் ஏற்றுக்கொள்ள மறுத்தால் நோயில் இருந்து பாதுகாத்துக்கொள்வது அவர்களது பொறுப்பாகும் என்று ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் லலித் வீரதுங்க தெரிவித்தார்.
இன்றைய தினம் கொழும்பில் இடம்பெற்ற விசேட ஊடகவியல் மாநாட்டிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்
இந்தியாவிடமிருந்து இலவசமாக பெற்றுக் கொள்ளப்படும் 05 இலட்சம் கொவிட் தடுப்பூசிகள் நாளை முற்பகல் 11 மணிக்கு இலங்கை வந்த சேரும்.
இலங்கையில் தடுப்பூசி பெறும் முதல் குழுவாக 250,000 முன்னணி வரிசை பணியாளர்கள் இருப்பார்கள்.
வெள்ளிக்கிழமை (29) தொடங்கும் திட்டத்தின் கீழ் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும்.
கொவிட்டுக்கு எதிரான தடுப்பூசியை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமல்ல. இதனை தன்னிச்சையாக நாட்டு மக்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது அரசாங்கத்தின் நிலைப்பாடு ஆகும்.
அவுஸ்ரேலியாவில் இந்த தடுப்பூசி ஏற்றிக்கொள்வது அந்நாட்டு மக்களுக்கு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இலங்கையில் கட்டாயப்படுத்தப்பட்டுள்ளதா? என்று செய்தியாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே மேற்கண்டவாறு பதிலளித்தார்.
அவுஸ்ரேலியாவில் அனைத்து வாக்காளர்களும் வாக்களிப்பது கட்டாயமாகும். ஆனால் இலங்கையில் கட்டாயமில்லை. இதேபோன்று இலங்கையிலும் அரசாங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது என்று தெரிவித்தார்.
இந்த தடுப்பு மருந்து முற்று முழுதாக இலவசமாக பொதுமக்களுக்கு வழங்கப்படும்.
எந்தவித கட்டணமும் அறவிடப்படாது என்று தெரிவித்த அவர் தனியார் துறையினருக்கு இதனை விற்பனைக்காக வழங்கப்படுமா? என்ற கேள்விக்கு பதிலளிக்கையில், இதுவரையில் அரசாங்கம் இந்த விடயத்தில் கவனம் செலுத்தவில்லை.
தனியார் துறையை சேர்ந்தோர் இந்த நோய் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபடுவோருக்கு ஏற்றிக்கொள்வதற்கும் இலவசமாக அரசாங்கம் வசதி செய்துள்ளது.
இருப்பினும், சில நிறுவனம் தனிப்பட்ட முறையில் இதனை பெற்றுக்கொள்ள முயற்சிக்கக்கூடும். அதுதொடர்பில் அரசாங்கம் இன்னும் தீர்மானிக்கவில்லை.
மூன்றாம் கட்டத்தின் கீழ் முதியோருக்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ள தடுப்பு மருந்து பெற்றுக்கொள்வோர் தொடர்பான விபரங்களை தேர்தல் ஆணைக்குழு தரவுகள் மூலமும், கிராம உத்தியோகத்தர் மூலமும் விபரங்களை பெற்று தடுப்பு மருந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தொற்றா நோய் உள்ளவர்களை இலக்காக கொண்டு தடுப்பு மருந்து வழங்கப்படவுள்ளது என்றும் தெரிவித்தார்.
தேர்தல் ஆணைக்குழுவில் இவ்வாறானோரின் பெயர்கள் இடம்பெறாதவர்கள் குறித்து அவர் கருத்து தெரிவிக்கையில், 3 ஆம் கட்ட தடுப்பூசி வழங்கப்படும் பொழுது அது தொடர்பான விளம்பரம் வெளியிடப்படும்.
தடுப்பு மருந்தை பெற்றுக்கொள்ள விரும்புவோர் அந்த விளம்பரத்தில் இதற்காக குறிப்பிடப்படும் படிவத்தை நிரப்பி சுகாதார பிரிவுக்கு சமர்ப்பிக்க வேண்டும் என்றார்.
கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!
ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!
கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.
கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!
தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு
மீண்டும் நடிக்க வரும் நதியா!

மீண்டும் நடிக்க வரும் நதியா!
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!
புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி