வாவ்! 100 கோடியைத் தாண்டியதா ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை?
வாவ்! 100 கோடியைத் தாண்டியதா ஐ-போன் பயனாளர்கள் எண்ணிக்கை?
உலகில் ஐ-போன் பயனாளர்களின் எண்ணிக்கை புதிய இலக்கை எட்டியுள்ளது. உலகில் இதுவரை 100 கோடிக்கும் அதிகமானோர் ஐ-போன் பயனாளர்களாக உள்ளதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் ஆப்பிள் நிறுவனத்திற்கான வருவாய் டிசம்பர் மாத தொடக்கம் வரை 6,500 கோடியாக அதிகரித்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்பான ஐ-போன் பயன்பாடு உலகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஐ-போன் 12 அதிக அளவிலான மக்களால் விரும்பப்படுவதால் ஆண்டுதோறும் 17 சதவிகிதம் வளர்ச்சி ஏற்படுகிறது.
இது தொடர்பாக ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக் கூறியதாவது, ஆப்பிள் நிறுவனத்தின் வளர்ச்சி தற்போது புதிய இலக்கை எட்டியுள்ளது.
டிசம்பர் மாத ஆரம்ப கால கட்டம் வரை 100 கோடியே 65 லட்சம் ஐ-போன்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஆண்டுதோறும் 17 சதவிகிதம் வளர்ச்சியை எட்டியுள்ள நிலையில், ஐ-போன் 12 மக்களிடையே பெற்ற வரவேற்பால் தற்போது 100 கோடிக்கும் அதிகமான பயனாளர்களை ஆப்பிள் நிறுவனம் எட்டியுள்ளது என்று கூறினார்.
அமெரிக்காவில் எடுக்கப்பட்ட ஆய்வின் படி, ஐ-போன் பயன்படுத்தும் மக்கள் 98 சதவிகிதம் ஐ-போன் 12 உடன் தன்னிறைவு அடைவதாகத் தெரியவந்துள்ளது. இதேபோன்று ஐ-பேட் 41 சதவிகிதமும், மேக் 21 சதவிகிதமும் தன்னிறைவு ஏற்படுத்துகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரி லுகா மாஸ்திரி, ஐ-போன் விற்பனையில் கடந்த ஆண்டை விட 21 சதவிகிதம் லாபம் அதிகரித்து 95.7 பில்லியன் வருவாய் கிடைத்துள்ளது.
ஆப்பிள் நிறுவனத்தின் சேவை ஆண்டுதோறும் 24 சதவிகிதம் அதிகரித்து அதிகபட்சமாக 15.8 பில்லியன் டாலர் வருவாய் ஈட்டப்பட்டுள்ளது.
கட்டண சந்தாக்கள் படிப்படியாக அதிகரித்து வருவதாகவும், 2020-ம் ஆண்டிற்குள் 600 மில்லியன் சந்தாக்களை எட்ட இலக்கு நிர்ணயிக்கப்பட்டதாகவும் கூறினார்.
ஆப்பிள் சேவைகளில் தற்போது 620 மில்லியன் சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். இதில் 140 சந்தாதாரர்கள் கடந்த ஓராண்டில் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!

கனடா - அமெரிக்கா எல்லையில் அமலுக்கு வந்த கட்டாய நடைமுறை - வாலாட்டினால் 750,000 டொலர் அபராதம்!
ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!

ஐ.நா-வில் இலங்கை தொடர்பாக கருத்துகளை முன்வைத்த கனடா வெளிவிவகார அமைச்சர்!
கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!

கனடாவிற்கு கூடுதல் தடுப்பூசி தேவை - இந்தியாவின் சீரம் நிறுவனத்துடன் பேச்சு!
வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.

வவுனியாவில் இளம் குடும்பஸ்தர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார்.
வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.

வெலிகட சிறைச்சாலை ஹொரணவிற்கு மாற்ற திட்டம் உள்ளதாக இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே தெரிவிப்பு.
கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!

கர்ணன் திரைப்படத்தின் மாஸ் அப்டேட்டை வெளியிட்ட கலைப்புலி தாணு!
தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு

தேசிய சகவாழ்வு மொழி உரிமை தொடர்பில் செயலமர்வு
மீண்டும் நடிக்க வரும் நதியா!

மீண்டும் நடிக்க வரும் நதியா!
அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!

அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் சிறிதளவில் மழை பெய்யக்கூடும்!
புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி

புதுச்சேரி, கோவைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார் பிரதமர் மோடி