கனடாவில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்ட புதிய தடுப்பூசி - நாட்டில் தடுப்பூசி திட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்த கனடா முடிவு!
கனடாவில் அதிகாரப்பூர்வ ஒப்புதல் வழங்கப்பட்ட புதிய தடுப்பூசி - நாட்டில் தடுப்பூசி திட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்த கனடா முடிவு!
உலகளவில் பல்வேறு நாடுகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமடைந்துள்ளன. பல நாடுகளில் பரவலாக ஃபைசர் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதுபோக, மாடர்னா, அஸ்ட்ராஜெனகா ஆகிய நிறுவனங்களின் தடுப்பூசிகளும் பயன்படுத்தப்படுகின்றன.
இந்நிலையில், அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பயன்படுத்துமாறு உலக சுகாதார அமைப்புக்கு ஆலோசனை வழங்கும் நிபுணர்கள் பரிந்துரைத்துள்ளனர். கொரோனாவின் உருமாறிய புதிய வைரஸ்களால் அவதிப்படும் நாடுகளும் அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை பயன்படுத்தலாம் என அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
தென்னாப்பிரிக்காவில் பரவத் தொடங்கியுள்ள புதிய கொரோனா வைரஸை தடுப்பூசிகளால் எதிர்கொள்ள முடியுமா என பல தரப்புகளில் சந்தேகங்கள் எழுந்துள்ளன. இந்த சூழலில், அஸ்ட்ராஜெனகா தடுப்பூசியை அனைத்து கொரோனா வைரஸ்களுக்கும் பயன்படுத்தலாம் என உலக சுகாதார அமைப்பின் ஆலோசனை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அஸ்ட்ராஜெனெகாவின் கோவிட் -19 தடுப்பூசியை பயன்படுத்த கனடா வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது. Health Canada கடந்த டிசம்பர் மாதம் ஃபைசர்-பயோஎன்டெக் மற்றும் மாடர்னா உருவாக்கிய 2 கொரோனா தடுப்பூசிகளை அங்கீகரித்தது.
ஆனால், நவம்பரில் வெளியிடப்பட்ட சோதனை தரவுகளின் அடிப்படையில் அஸ்ட்ராஜெனெகாவின் தடுப்பூசிக்கு ஒப்புதல் அளிப்பதில் Health Canada தாமதம் காட்டியது. இந்நிலையில் தற்போது, நாட்டின் அனைத்து பெரியவர்களுக்கும் அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி பாதுகாப்பானது என ஆய்வின் முடியில் அறியப்பட்டப்பின், ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகா இணைந்து உருவாக்கிய கோவிட்-19 தடுப்பூசியை நாட்டின் 3-வது அவசரகால தடுப்பூசியாக பயன்படுத்த்த அங்கீகாரம் அளித்துள்ளது.
இதன் மூலம், நாட்டில் தடுப்பூசி திட்டத்தின் வேகத்தை அதிகப்படுத்த கனடா முடிவெடுத்துள்ளது. மேலும், அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி கொரோனாவுக்கு எதிராக 62.1 சதவீதம் செயல்திறன் கொண்டதாகவும், மொத்தத்தில் அதை பயன்படுத்துவதன் முலம் முக்கியமான பாதுகாப்பு கவலைகள் எதுவும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. இந்நிலையில், அஸ்ட்ராஜெனெகாவிடமிருந்து 20 மில்லியன் டோஸ் தடுப்பூசியை கனடா ஆர்டர் செய்துள்ளது.
குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை

குடும்பஸ்தர் அடித்து கொலை - பொலிசார் விசாரணை
காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!

காலையிலே இவ்வளவு துக்கமா? அயோ நடிகர் விவேக் இறந்துவிட்டாரே? பொதுமக்கள் அஞ்சலிக்காக உடல் அவரது வீட்டில் வைக்கப்பட்டது!
ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!

ஆடை மாற்றும் அறையில் இரகசிய கேமரா - கையும் களவுமாக அகப்பட்ட ரொறன்ரோ ஒளிப்படப்பிடிப்பாளர்!
ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!

ஸ்காபறோ தடுப்பூசி விநியோக நிறுத்தம் - விஜய் தணிகாசலம் உட்பட பல அரசியல் தலைவர்கள் பிரதமருக்கு கடிதம்!
பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!

பாகிஸ்தானில் சமூக ஊடகங்கள் தற்காலிகமாக முடக்கம்!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!
தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கா? புதிய கட்டுப்பாடுகள் விரைவில் அறிவிக்கப்படும்!
நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!

நடிகர் விவேக் உடல்நிலை பாதிப்புக்கும் தடுப்பூசிக்கும் தொடர்பு இல்லை!
ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!

ஆப்பிரிக்க நாட்டில் அகதிகள் படகு கடலில் கவிழ்ந்த விபத்து - பலி எண்ணிக்கை 42 ஆக உயர்வு!
ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!

ஆடையின்றி தோன்றிய லிபரல் எம்.பிக்கு எச்சரிக்கை! கண்டிக்கும் எதிர்க்கட்சி கொறடா!
இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!

இந்திய எல்லைக்குள் தவறுதலாக நுழைந்த பாகிஸ்தானியர் - அடுத்தடுத்து சந்தித்த இன்ப அதிர்ச்சி!