Published:Category:

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

#MIvDC

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டம் மூதூரில்.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்ட முன்மொழிவுகள் பெற்றுக்கொள்ளும் வேலைத்திட்டத்தின் கீழ் மூதூர் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் பெற்றுக் கொள்ளும் நிகழ்வு நேற்று (25) மூதூர் பிரதேச செயலகத்தில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் ஒருங்கிணைப்புக் குழு தலைவருமாகிய கபில நுவன்  அத்துகோரல தலைமையில் நடைபெற்றது.

எதிர்வரும் 2022ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தினூடாக கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பல திட்டங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அதன் மூலமாக கிராம மக்களுடைய வருமானத்தை அதிகரிக்க கூடிய சந்தர்ப்பம் காணப்படுவதாக இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரல  தெரிவித்தார்.

உற்பத்தி சார் விடயங்களுக்கு கூடிய கவனம் செலுத்தப்படுவதுடன் அவற்றுக்கான நிதி உதவிகள் உட்பட ஏனைய உதவிகளையும் தாம் வழங்க தயாராக இருப்பதாகவும் நிதியமைச்சர் இது தொடர்பில் கூடிய அக்கறையுடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.

திருகோணமலை மாவட்டம் பல இயற்கை வளங்களை கொண்டமைந்த மாவட்டமாக காணப்படுகின்றது.

எனவே மாவட்ட அபிவிருத்தி மூலம் மக்களுக்கு பிரதிபலன் கிடைக்கக்கூடிய வேலைத் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது காலத்தின் தேவையாக காணப்படுகின்றது.

எதிர்வரும் வருடத்தில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்திக்கு 1574 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட இருக்கிறது.

இதற்கு மேலதிகமாக இன்னும் பல நிதி ஒதுக்கீடுகள் கிடைக்கப்பெறலாம்.

எனவே கிராமிய மக்களுடைய தேவைகளை இனங்கண்டு அவரிடமிருந்து முன்மொழிவுகளை பெற்று அவற்றை நடைமுறைப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக இதன்போது மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராள தெரிவித்தார்.

தற்போது அரசாங்கம் உற்பத்தி சார் விடயங்களை மேம்படுத்துவதற்கு பல்வகையான செயற்பாடுகளை கிராமிய மட்டத்தில் மேற்கொண்டு வருகின்றது.

இவற்றின் மூலமாக உற்பத்தி செயற்பாடு அதிகரிக்கப்படுவதுடன் மக்களின் வாழ்வாதாரமும் மேம்படக்கூடிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது.

வறுமையை ஒழிக்கும் நோக்கத்தை கொண்டதாகவும் காணப்படுகின்றது.

அதிமேதகு ஜனாதிபதி அவர்களின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ள  விடயங்களை யதார்த்த பூர்வமாக்கும் நோக்கில் பல விடயங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றது.

நிதியமைச்சர் அவர்கள் கிராமிய பொருளாதாரத்தை வலுப்படுத்த தேவையான நிதி உதவி உட்பட ஏனைய உதவிகளை வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் அதன் ஒரு அங்கமாக இந்த வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் மேற்கொள்ளப்படுவதாகவும் இதன்போது அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

மேலும் இந்நிகழ்வின் போது மீள்குடியேறிய மக்களுடைய வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான காசோலை பத்திரங்கள், உள்ளூர் உற்பத்தியை மேம்படுத்தும் நோக்கில் பயறு, உளுந்து ஆகிய விதைப்பக்கற்றுக்கள்  இதன்போது மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரலவால் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

அத்துடன் சௌபாக்கியா உற்பத்தி கிராம வேலைத்திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கான  பயனாளி தெரிவு சான்றிதழும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டமை விஷேட அம்சமாகும்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாணசபையின் முன்னாள் உறுப்பினர்களான நிமல் காமினி ஹேவாவிதாரண, ஆரியவதி கலபதி, மூதூர் பிரதேச செயலாளர் எம் .பி .எம் .முபாரக், அரசியல் பிரமுகர்கள், அரச அதிகாரிகள், கிராம முன்னேற்றச் சங்கம் மற்றும் ஏனைய சங்கத்தின்  உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

#MIvDC

வெடிப்பு சம்பவத்தின் போது உயிரிழந்தவரின் சடலத்தை உடற்கூற்றுப் பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்குமாறு உத்தரவு.

Published:Category:

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

#MIvDC

தடுப்பூசி செலுத்தினால் எய்ட்ஸ் வரும் பிரேசில் ஜனாதிபதியின் கருத்து குறித்து விசாரணை.

Published:Category:

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

#MIvDC

கார் தீப்பற்றி எரிந்து குழந்தை உட்பட 5 பேர் பலி.

Published:Category:

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

#MIvDC

கென்யாவில் ஆற்றை கடக்க முயன்ற பேருந்து கவிழ்ந்து விபத்து 23 பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு.

Published:Category:

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

#MIvDC

இலங்கையில் ஒரே நாளில் கொரோனா தொற்று காரணமாக 21 பேர் உயிரிழப்பு.

Published:Category:

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

#MIvDC

நாடு மீண்டும் முடக்கப்படாமல் இருக்க வேண்டுமாயின் பாதுகாப்பு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். 

Published:Category:

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

#MIvDC

புத்தாண்டு காலப்பகுதியில் உள்நாட்டு அரிசியின் விலை 250 ரூபாய் வரை அதிகரிப்பதை யாராலும் தடுக்க முடியாது என எச்சரிக்கை.

Published:Category:

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

#MIvDC

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலைய செயற்பாடுகள் மீண்டும் ஆரம்பம்.

Published:Category:

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

#MIvDC

இளைஞர் மூவர் முல்லை கடலில் மாயம் ஒருவர் சடலமாக மீட்பு.

Published:Category:

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

#MIvDC

விஜய் சேதுபதி மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரி மனு தாக்கல்.

  • Thedipaar