பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.
பிரபல நடன இயக்குனர் சிவசங்கர் மாஸ்டர் காலமானார்.
தமிழ் சினிமாவில் நடன இயக்குனர் மற்றும் நடிகராக பலரால் அறியப்பட்டவர் சிவசங்கர் மாஸ்டர் 72 வயதில் உயிரிழந்துள்ளார் .
இவர் கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு, அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்த நிலையில் ஐதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருந்தது தெரியவந்தது.
அவரது நுரையீரல் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டிருந்தது. அவரது மூத்த மகனும் கொரானாவால் பாதிக்கப்பட்டு அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இதற்கிடையே சிவசங்கர் மாஸ்டரின் சிகிச்சைக்கு தேவையான பணத்தை கட்டமுடியாமல் அவரது குடும்பம் கஷ்டப்படுவதாக தகவல் வெளியானது.
இதையடுத்து நடிகர்கள் சிரஞ்சீவி, தனுஷ், சோனு சூட் ஆகியோர் உதவி செய்தனர்.
இந்நிலையில், வைத்தியர்கள் தொடர் சிகிச்சை அளித்தும் பலனளிக்கவில்லை.
நேற்றைய தினம் சிகிச்சை பலனின்றி இவர் உயிரிழந்துள்ளார்.
அவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சிவசங்கர் மாஸ்டரின் உடலுக்கு இன்று பிற்பகல் இறுதிச்சடங்கு நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவசங்கர் மாஸ்டர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.
கண்ணா லட்டு தின்ன ஆசையா, தில்லுக்கு துட்டு, தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை

பிஸ்கட் விலைகளை மேலும் அதிகரிக்க நடவடிக்கை
தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்

தங்க இடமில்லாததால் 18 வயது காதலியை தெருவில் விட்டு தலைமறைவான காதலன்
போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா

போராட்டக்காரர்களால் ஜனாதிபதியின் காருக்கு ஏற்பட்ட சேதம் 19 கோடி ரூபா
நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி

நாட்டில் நேற்றைய தினம் மேலும் 227 பேருக்கு கொவிட் தொற்று உறுதி
இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்
இலங்கையிலிருந்து தப்பியோடிய கோட்டாபய ராஜபக்ச தாய்லாந்தில் புகலிடம்
கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.

கிளிநொச்சி தர்மபுரம் வைத்தியசாலையில் மருத்துவ முகாம்.
சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை

சீனா கப்பல் தொடர்பில் வெளிவிவகார அமைச்சு கையாண்டமை கவலை
கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.

கரப்பந்தாட்ட போட்டியில் Runner up ஆக தம்பலகாமம் பிரதேச அணி.
பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகைக்கு கொரோனா தொற்று உறுதி
சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது

சீன ராணுவத்தின் உளவு கப்பல் இலங்கைக்குள் நுழைந்தது