Published:Category:

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

#MIvDC

உலகை அச்சுருத்தும் ஒமிக்ரான் வைரஸ் கனடாவிலும் பரவியது..!

தென் ஆப்பிரிக்காவில் ஒமிக்ரான் என்ற உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றி பரவத்தொடங்கி இருப்பது உலக நாடுகளை அதிர வைத்துள்ளது. உலக சுகாதார அமைப்பு இந்த புதிய வகை கொரோனா வைரஸ் ஒரு கவலையான மாறுபாடு எனக் கூறியுள்ளது. மேலும், வைரசின் இந்த புதிய மாறுபாடு கொரோனா பரவலைத் தடுக்கும் முயற்சியில் உள்ள உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலை உருவாக்கியுள்ளதாகவும் கூறியுள்ளது.

இந்நிலையில் கனடாவில் இரண்டு நபர்களுக்கு புதியவகை ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று, ஓமிக்ரான் வைரசின் பரவல் காரணமாக ஏழு ஆப்பிரிக்க நாடுகளின் பயணத்திற்கு கனடா தடை விதித்திருந்தது. ஆனால் அதில் நைஜீரியா இடம்பெறவில்லை.

இந்த சூழலில் சமீபத்தில் நைஜீரியாவுக்குச் சென்ற இரண்டு நபர்களிடம் புதிய வகை ஓமிக்ரான் வைரஸ் நோயின் பாதிப்புகளை கண்டறிந்துள்ளதாக கனடா  தெரிவித்துள்ளது. தற்போது இரண்டு நோயாளிகளும் தனிமையில் உள்ளனர், அதே நேரத்தில் பொது சுகாதார அதிகாரிகள் அவர்களின் நெருக்கமாக இருந்தவர்களின் தகவல்களை சேகரித்த் வருகின்றனர். இரண்டு பாதிப்புகளும் தலைநகர் ஒட்டாவாவில் இருப்பதை ஒன்ராறியோ அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

இதுதொடர்பாக சுகாதார அமைச்சர் ஜீன்-யவ்ஸ் டுக்லோஸ் வெளியிட்ட அறிக்கையில், “கொரோனா நோயாளிகளின் சோதனை மற்றும் கண்காணிப்பு ஒன்டாரியோவில் கவலைக்குரிய ஓமிக்ரான் மாறுபாட்டின் இரண்டு வழக்குகளை உறுதிப்படுத்தியுள்ளது. கனடாவின் பொது சுகாதார முகமையால் இன்று எனக்குத் தெரிவிக்கப்பட்டது. கண்காணிப்பு மற்றும் சோதனை தொடர்வதால், இந்த மாறுபாட்டின் பிற வழக்குகள் கனடாவில் கண்டறியப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது” என்று அவர் தெரிவித்தார்.


மேலும் செய்திகளுக்கு..

Connect Our Social Media Groups

Published:Category:

‘பப்ஜி’ விளையாட்டால் குடும்பத்தேயே சுட்டுக் கொன்ற சிறுவன்.

#MIvDC

‘பப்ஜி’ விளையாட்டால் குடும்பத்தேயே சுட்டுக் கொன்ற சிறுவன்.

Published:Category:

பாக்ஸ்லோவிட் மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அம

#MIvDC

பாக்ஸ்லோவிட் மாத்திரைக்கு ஐரோப்பிய ஒன்றிய மருந்துக் கட்டுப்பாட்டு அம

Published:Category:

அமெரிக்காவில் பனி காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 10 சிறார்கள் காயம்

#MIvDC

அமெரிக்காவில் பனி காரணமாக பாலம் இடிந்து விழுந்ததில் 10 சிறார்கள் காயம்

Published:Category:

பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் சென்ற அவுஸ்திரேலியா.

#MIvDC

பாகிஸ்தான் அணியைத் தோற்கடித்து அரையிறுதிக்குள் சென்ற அவுஸ்திரேலியா.

Published:Category:

கொரோனாவிற்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் - டாக்டர் ஐ.எல்.

#MIvDC

கொரோனாவிற்கான போராட்டத்தை முன்னெடுத்து செல்ல வேண்டும் - டாக்டர் ஐ.எல்.

Published:Category:

நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எ

#MIvDC

நீதி அமைச்சின் நடமாடும் செயலமர்வில் காணாமல் போனோர் விவகாரத்தை கையில் எ

Published:Category:

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொர

#MIvDC

நீதி அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட நீதிக்கான அணுகல் எனும் தொனிப் பொர

Published:Category:

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்

#MIvDC

போராட்டங்களை நடத்துவதன் மூலம் காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்கு தீர்

Published:Category:

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

#MIvDC

தமிழ்த் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் ஏற்பாட்டில் அரசியல் கட்சிகளின் பி

Published:Category:

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

#MIvDC

சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட பாகிஸ்தான் பீட்ரூட் மீட்பு.

  • Thedipaar