ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தில் கலந்து வரலாற்று தொன்மையை பாதுகாக்க சிவசிறி தத்துவகலாநிதி அமிர்த சிறிகாந்த குருக்கள்தெரிவிப்பு.
ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தில் கலந்து வரலாற்று தொன்மையை பாதுகாக்க சிவசிறி தத்துவகலாநிதி அமிர்த சிறிகாந்த குருக்கள்தெரிவிப்பு.
நவ ஈச்சரங்களில் ஒன்றான உருத்திரபுரீச்சரமான கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தின் மகா கும்பாபிசேகத்தில் கலந்து எண்ணெய் காப்பு சாற்றி வழிபட்டு வரலாற்று தொன்மையை பாதுகாக்க அடியவர்கள் முன்வர வேண்டும் என கும்பாபிசேகத்தினுடைய நெறியாளர் சிவசிறி தத்துவகலாநிதி அமிர்த சிறிகாந்த குருக்கள் அழைப்பு விடுத்துள்ளார்.
கிளிநொச்சி உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தினுடைய மகா பெரும் சாந்தி வைபவம் நாளை ஆரம்பமாகவுள்ள நிலையில், ஆலய வளாகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஈழமணி திருநாட்டின் வடக்கே கிளிநொச்சியில் உருத்திரபுரம் என்கின்ற பகுதியில் பல நூற்றாண்டுகளாக கோவில்கொண்டு தன்னை நாடி வருகின்ற அடியவர்களிற்கெல்லாம் இகபர சௌபாக்கியங்களை அள்ளி வழங்குகின்ற உருத்திரபுரீஸ்வரர் ஆலயத்தினுடைய மகா பெரும் சாந்தி வைபவம் நாளை ஆரம்பமாகின்றது.
இங்கே நடைபெறுகின்ற மகா கும்பாபிசேகம் 17 குண்டங்களை பிரதான யாகசாலையாக அமையப்பெற்று இங்கே ஆலயத்தில் இடம்பெறுவதற்கு எல்லாம் வல்ல உருத்திரபுரீஸ்வரருடைய திருவருள் கைகூடியிருக்கின்றது.
இந்த மகா கும்பாபிசேகத்தினுடைய கருமாரம்பம் என்ற கிரிகை ஆரம்பிக்கின்ற நாளாக நாளை திங்கட்கிழமை காலை கோதலி முகுர்த்தத்திலே ஆரம்பமாக இருக்கின்றது.
எதிர்வரும் 22ம் திகதி இந்த கும்பாபிசேகத்தினுடைய அடுத்த நிகழ்வாக எண்ணெய் காப்பு சாற்றுகின்ற நாளாக அமையப்பெற்றுள்ளது.
குறித்த நாளாக சனிக்கிழமை அதிகாலை 5 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை அடியவர்கள் உங்கள் கரங்களினாலே எண்ணெய் காப்பு சான்றுகின்ற நிகழ்வும் ஆலயத்திலே ஒழுங்கு செய்யப்பட்டிருக்கின்றது. இன்றைய இடர்கால நிலைமைகளை கருத்தில்கொண்டு,முககவசங்கள் அணிந்து சமூக இடைவெளிகளை பின்பற்றியவாறு அடியவர்கள் கலந்துகொள்ளக்கூடிய வாய்ப்பு கிடைத்திருக்கின்றது.
மகா கும்பாபிசேகமானது எதிர்வரும் ஞர்யிற்றுக்கிழமை காலை 10.32 மணிமுதல் 11.22 மணி வரையுள்ள சுபமுகுர்த்தவேளையில் இடம்பெறவுள்ளது.
அந்த வகையில் இந்த நிகழ்வுகள் ஒவ்வொன்றும் நேர்த்தியான முறையிலே ஆலயத்தில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளமைக்கு அமைவாக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றது.
எல்லா இடங்களிலும் இருக்கக்கூடிய சிவபெருமானுடைய அடியவர்கள் இந்த ஆலயத்திற்கு வருகைதந்து, கும்பாபிசேக காலத்தில் உள்ள எல்லாம்வல்ல திருவருளை பெற்றுக்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
இந்த ஆலயம் வரலாற்று தொண்மைகொண்ட ஆலயமாக இருக்கின்றது இந்த ஆலயத்தின் அமைவிடம் மற்றும் ஆலயத்தின் மூலஸ்தானத்தில் அமைந்திருக்கின்ற சிவபெருமான் சதுர ஆவுடையாரையுடைய ஒரேயொரு திருத்தளமாக இலங்கை நாட்டிலே இங்கு அமையப்பெற்றிருக்கின்றது.
அநேகமாக பஞ்ச ஈச்சரங்கள் மட்டுமல்ல, ஒன்பது ஈச்சரங்கயுடைய நாடாகவும் எமது நாடு ஒரு காலத்தில் அமைந்திருக்கின்றது.
ஆனால் இன்றைய காலங்களில் பஞ்ச ஈச்சரங்களாக மருவியிருக்கின்றது அதற்கு பின்னாலே நான்கு ஈச்சரங்கள் இருக்கின்றது.
அதில் ஒன்றாக உருத்திரபுரீச்சரத்தை நாங்கள் அதனுடைய ஆய்வுகளின் அடிப்படையிலும், எம்முடைய மன சிந்தனைக்கு ஏற்ற வகையிலும் இந்த ஆலயத்தினுடைய தொன்மைகளை கருத்தில் கொண்டும் இது நவஈச்சரங்களில் ஒன்றாக விளங்குகின்றது ஓரளவிற்கு ஊகிக்கக்கூடியதாக இருக்கின்றது.
அந்த வகையில் எல்லா அடியவர்களும் இங்கு வருகை தந்து வழிபாட்டிலும், கும்பாபிசேக நிகழ்விலும் கலந்து கொள்ள வேண்டுகின்றோம் என அவர் இதன்புாது தெரிவித்தார்.

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!

தமிழ் கனேடியர் என்பதில் பெருமையடைகிறேன் - அனிதா ஆனந்த்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
பாம்பனில் நிறம் மாறிய கடல்!
சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!

சென்னையில் தரை இறங்கியபோது விமானம் மீது லேசர் ஒளி அடித்த மர்ம நபர்கள்!
ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!

ஸ்பெயின், போர்ச்சுகல், அமெரிக்க நாடுகளில் பரவும் குரங்கு அம்மை நோய்!
ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!

ரஷ்யாவில் பர்க்கர் 250 கி.மீ பயணம் செய்து வரும் மக்கள்!
அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!

அணு உலை கழிவு நீரை கடலில் திறந்து விடுகிறது ஜப்பான்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
அமெரிக்காவில் பரவியது குரங்கு காய்ச்சல்!
இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.

இன்று நள்ளிரவு முதல் பாணின் விலை 30 ரூபாவாக அதிகரிப்பு.
விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.

விவசாயிகளுக்கு ஒரு இரசாயன உர மூடையை 10,000 ரூபாவுக்கு வழங்க தீர்மானம்.
விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.

விவசாயிகளுக்கு எரிபொருள் வழங்க புதிய திட்டம்.