இரண்டு இளம் குடும்பஸ்தர்கள் டெங்கு நோயின் தாக்கத்தால் உயிரிழப்பு.
இரண்டு இளம் குடும்பஸ்தர்கள் டெங்கு நோயின் தாக்கத்தால் உயிரிழப்பு.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் இரண்டு இளம் குடும்பஸ்தர்கள் டெங்கு நோயின் தாக்கத்தினால் உயிரிழந்துள்ளதாக மட்டக்களப்பு,மண்முனை வடக்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ.உதயகுமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட பகுதியில் இதுவரையில் சுமார் 240 க்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் இனங்காணப்படடுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டு டெங்கு ஒழிப்பு சிரமதான மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இலங்கையில் டெங்கு தாக்கம் அதிகமாகவுள்ள மாவட்டமாக அடையாளப்படுத்தப்பட்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு ஒழிப்பு ,சிரமதான , விழிப்புணர்வு வேலைத்திட்டங்கள் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் அதிக டெங்கு நோய் தாக்கம் உள்ள பகுதியாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மட்டக்களப்பு சுகாதார அலுவலக பிரிவுக்குட்பட்ட மாமாங்கம் பொதுசுகாதார பரிசோதகர் பிரிவு கிராம சேவையாளர் பிரிவில் டெங்கு ஒழிப்பு விசேட விழிப்புணர்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஜி .சுகுணன் வழிகாட்டலின் கீழ் மட்டக்களப்பு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ .உதயகுமார் தலைமையில் முன்னெடுக்கப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு பணியில் பிராந்திய தொற்று நோயியல் பிரிவு வைத்தியர் குணராஜா சேகரம், மேற்பார்வை உத்தியோகத்தர் வி.விஜேகுமார், பொதுசுகாதார பரிசோதகர்கள் பொலிஸ், உத்தியோகத்தர்கள், முப்படையினர் இணைந்துள்ளனர்.
மேற்கொள்ளப்பட்ட டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு சோதனை நடவடிக்கையின் போது டெங்கு நுளம்பு பெருக்கம் உள்ள இடங்களாக அடையாளம் காணப்பட்ட காணி உரிமையாளர்களுக்கு சிவப்பு எச்சரிக்கையுடன் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.