யாழில் பெண் போல் ஆண்களிடம் பணம் பெற்ற 26 வயது இளைஞர் கைது.
யாழில் பெண் போல் ஆண்களிடம் பணம் பெற்ற 26 வயது இளைஞர் கைது.
கைபேசியில் செயலியை உபயோகித்து பெண் குரலில் பேசி ஏமாற்றி, ஆண்களிடம் பணம் பறித்த குற்றச்சாட்டில் வட்டுக்கோட்டையைச் 26 வயது இளைஞர் ஒருவர் யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் வைத்து நேற்றைய தினம் யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுன்னாகத்தை சேர்ந்த ஒருவருக்கு வந்த கைபேசி அழைப்பில் பெண் ஒருவர் உரையாடியுள்ளார்.
அதன்பின்னர் அவர்கள் தொடர்ச்சியாக உரையாடியுள்ளனர். பின்னர் அவர்கள் அந்தரங்கப் படங்களைப் பரிமாறிக் கொண்டுள்ளனர்.
அதன்பின்னர் கை பேசியில் பேசிய பெண், அந்த நபரை மிரட்டி ஒன்றரை லட்சம் ரூபா பறித்துள்ளார். அதன்பின்னரும் மிரட்டி ஒரு லட்சம் ரூபா கேட்டுள்ளார். அதில் சந்தேகமடைந்த அந்த நபர், இது தொடர்பில் யாழ்ப்பாணம் மாவட்ட புலனாய்வுப் பிரிவுப் பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.
கைபேசியில் பேசிய பெண்ணிடம், வங்கியில் பணம் வைப்புச் செய்ய முடியாது என்றும், நேரில் வந்து பெற்றுக் கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டது.
யாழ்ப்பாணம் நகரப் பகுதியில் பணத்தைப் பெற்றுக் கொள்ள வந்த 26 வயது இளைஞர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.
விசாரணையில் அந்த இளைஞரே பெண் குரலில் பேசி ஏமாற்றியமை தெரியவந்துள்ளது.
இந்த இளைஞர் ஏற்கனவே நால்வரிடம் இவ்வாறு பேசி நான்கு லட்சம் ரூபாவுக்கும் மேல் பறித்துள்ளமை தெரியவந்துள்ளது .
கைது செய்யப்பட்ட இளைஞரிடம் இருந்து நான்கு கைபேசிகளும், ஒரு லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது.

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!

டவுன்டவுனில் குடிபோதையில் வாகனம் ஓட்டிய 26 வயது நபர் - 1 பலி!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!

தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!

கப்பலுக்கு அடியில் வலையை அகற்றிய போது மூச்சுத் திணறி தொழிலாளி மரணம்!
இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!

இந்தியாவில் ஆளில்லா போர் விமான சோதனை வெற்றி!
புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!

புதின் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் உக்ரைன் போர் நடந்திருக்காது!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முதலையை திருமணம் செய்து கொண்ட மேயர்!
முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது

முள்ளியவளையில் புதையல் தோண்ட முற்பட்ட சந்தேகத்தில் 10 பேர் கைது
சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா

சிறப்பாக இடம் பெற்ற மன்னார் மடுஅன்னையின் ஆடித் திருவிழா
சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது

சட்டவிரோத எரிபொருள் விற்பனையில் ஈடுபட்ட சந்தேக நபர் கைது
பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.

பொகவந்தலாவையில் குளவி கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழப்பு.