தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
தஞ்சாவூரில் மாயமான 300 ஆண்டு பழமையான பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு!
தஞ்சையில் மாயமான, 300 ஆண்டுகள் பழமையான பைபிள், லண்டனில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கப்பட்ட இந்த பைபிளை மீட்க சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.
டென்மார்க் சீகன் பால்க் 1706-ல் இந்தியா வந்தனர். ஒரு அச்சகத்தை நிறுவி, அதில் தமிழ் மொழியில் இந்தியக் கலாச்சாரம் மற்றும் மதம் தொடர்பான நூல்களை வெளியிட்டார். பைபிளின் புதிய அத்தியாயத்தை தமிழில் 1715-ல் மொழிபெயர்த்தார். 1719-ல் சீகன் பால்க் காலமானார். அவரால் மொழிபெயர்க்கப்பட்டு, அச்சிடப்பட்ட அரிய பைபிள் (புதிய அத்தியாயம்) அப்போதைய தஞ்சாவூர் சரபோஜி மன்னருக்கு பரிசாக வழங்கப்பட்டது.
அந்தப் புத்தகம் பிற்காலத்தில் தமிழக அரசால் கைப்பற்றப்பட்டு, தஞ்சை சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டிருந்தது. முதன்முதலில் தமிழில் மொழிபெயர்க்கப்பட்ட, விலை மதிப்பில்லாத இந்த பைபிள் திடீரெனக் காணாமல் போனது. இதுதொடர்பாக 2005 அக்.10-ல், சரஸ்வதி மகால் அருங்காட்சியக நிர்வாக அலுவலர், தஞ்சாவூர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பின்னர், கண்டுபிடிக்க இயலாத வழக்காக இது முடித்து வைக்கப்பட்டது.
தனிப்படை போலீஸார் அருங்காட்சியகத்தின் பார்வையாளர் பதிவேடுகளைப் பார்வையிட்டனர். இதில், சில வெளிநாட்டினர் 2005 அக். 7-ம் தேதி அருங்காட்சியகத்துக்கு வந்து சென்றது தெரியவந்தது. மதபோதகர் சீகன் பால்க்கின் நூற்றாண்டு நினைவு நிகழ்ச்சிக்காக அவர்கள் ஒரு குழுவாக தஞ்சாவூர் வந்ததும், சீகன் பால்க் சம்பந்தப்பட்ட இடங்களைப் பார்வையிட்டதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும், பல்வேறு வெளிநாட்டு அருங்காட்சியகங்களின் வலைதளங்களையும் தனிப்படையினர் ஆராய்ச்சி செய்தனர். இதில், 17-ம் நூற்றாண்டில் தரங்கம்பாடியில் நிறுவப்பட்டிருந்த ஓர் அச்சகத்தில் அச்சிடப்பட்ட, சரபோஜி மன்னரின் கையெழுத்துடன் கூடிய இந்த பைபிள், கிங்ஸ் கலெக்ஷன் என்ற லண்டன் நிறுவனத்தின் வலைதளத்தில் கண்டுபிடிக்கப்பட்டது.
மேலும், அந்த பைபிள் சரஸ்வதி மகால் நூலக அருங்காட்சியகத்தில் திருடப்பட்டதும் உறுதி செய்யப்பட்டது.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.

மருத்துவ பரிசோதனை கட்டணம் இன்று முதல் அதிகரிப்பு.
துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.

துவிச்சக்கர வண்டி பாவனையினை அதிகரிக்க பாடசாலை மட்டத்தில் முன்னெடுப்பு.
T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.

T-20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி.
வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.

வடக்கு மாகாண முன்னாள் சுகாதார அமைச்சரின் வாகனம் விபத்து.
இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.

இந்தியாவில் மர்ம நோய் தாக்கி கால்நடைகள் உயிரிழப்பு.
900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.

900 ஆண்டுகள் பழமையான நீண்ட மரப்பாலம் எரிந்து நாசம்.
சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.

சகல கட்சிகளினதும் பிரதிநிதிகளும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைப்பு.
புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.

புதுக்குடியிருப்பு பகுதியில் கசிப்பு மற்றும் கெரோயினுடன் இருவர் கைது.
சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.

சிலி நாட்டில் 82 அடி விட்டத்தில் உருவான பெரிய பள்ளம்.
கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.

கொவிட் பரவல் மீண்டும் அதிகரிப்பு.