தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்

1) மாவீரர் நாள் தமிழர் நினைவு அறக்கட்டளை என்ற அமைப்பின் 'மாவீரர் நாள்' 1917 அல்பியன் வீதில் அமைந்துள்ள மண்டபத்தில் நடக்கிறது. 2) தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள் கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் என்ற அமைப்பின் 'தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்' 10801 மக்கோவன் அவனியுவில் அரங்கு அமைத்து நடக்கிறது. தமக்காகப் போரிட்டு மடிந்த வீரர்களை நடுகல் வைத்து வழிபடுவது தமிழர் மரபு. அவ்வாறே பண்டைய முருக வழிபாடு தோன்றியதென்பர் தமிழ் வரலாற்றறிஞர்கள். ஒரு முருகனுக்கு ஆயிமாயிரம் கோயில்களும் வழிபாடுகளும் இருப்பதுபோல நம் மாவீரர்களுக்கும் பல நினைவு நிகழ்வுகள் நடப்பது வரவேற்கத்தக்கதே. மிசிசாகா, பிரம்ரன், எற்றோபிக்கோ போன்ற மேற்கு பக்கத்தை அண்டி வசிப்பவர்கள் 1917 அல்பியன் வீதியில் தமக்கு அருகில் நடைபெறும் 'மாவீரர் நாள்' நிகழ்வுக்கும் . ஸ்காபுறோ, மார்க்கம் போன்ற இடங்களில் வசிப்பவர்கள் 10801 மக்கோவன் அவனியு என்ற இடத்தில் தமக்கு அருகில் நடைபெறும் 'தமிழர் தேசிய நினைவெழுச்சி நாள்' நிகழ்வுக்கும் செல்லாம். நிகழ்வு மாவீரர் நினைவை மீட்பதும் போற்றுவதுமாக இருந்தால் சரி. View More..


GET UPDATES


Our Sponsers