எந்தக்காலத்தில் தமிழர்களுக்கு சர்க்கரை நோய் வந்துள்ளது..? சீனி என்ற தீனியால் அரங்கேற்றப்பட்டிருக்கும் உலக அரசியலின் உச்சகட்டம்..!!

3 months agoபனை கருப்பட்டியை வாங்கித்தின்பதோடு நிறுத்திவிடாமல் ஆளுக்கொரு பனைமரத்தை நடவு செய்யலாம்.

நாம் உண்ணும் உணவு பருவந்தோறும் உற்பத்தி செய்யப்படுவதாகும். அந்த உற்பத்திக்கு நியாயமான விலை கொடுப்பதுமட்டும் உங்கள் கடமையாக நினைக்க வேண்டாம்.

தனியொரு மனிதனுக்கு தேவையான நீரையும், உணவையும் பன்னாட்டு நிறுவனத்திடம் கொடுத்துவிட்டு கூலிக்கு வேலைசெய்து அதை வாங்கி உண்பதுதான் வாழ்க்கையா? இதற்காகத்தான் பிறப்பெடுத்தோமா?

பனை மரத்திலிருந்து கிடைக்கும் பனை நீரில் இருந்து கருப்பட்டி என்கிற வெல்லம் அல்லது சக்கரைக்கட்டி தயாரிக்கப்படுகிறது.

இதனைப் பனைவெல்லம், பனை கருப்பட்டி என்று அழைக்கின்றோம்.

பனைநீரை எடுத்து அவற்றை நன்றாகக் காய்ச்சினால் கருப்பட்டி கிடைக்கும். இந்தக் கருப்பட்டியை மக்கள் பயன்படுத்தும்வரை சக்கரை நோய் என்பது யாருக்கும் இல்லை.

வெள்ளை சக்கரை எனும் சீனியின் விலை மிகவும் மலிவானதாக தெரியும். ஆனால் அதை முதலீடாக வைத்து சக்கரை நோயாளிகளை உருவாக்கி, மருந்து மாத்திரைகள் மூலம் கோடிகளை மறைமுகமாக சுரண்டுகிறார்கள்.

இதையெல்லாம் நாம் அறிந்து தெளிவடையும்போது பனைகள் முற்றிலும் அழிக்கப்படலாம். விழிப்புள்ள மக்கள் இப்போதும் பனை கருப்பட்டியை பயன்படுத்துகிறார்கள்.

தேவை ஒருபுறம் அதிகமாகும்போது, பனை மரங்கள் அழிக்கப்பட்டு மறுபுறம் உற்பத்தி குறைவதாலும் விலை அதிகரிக்கிறது.

இந்த இரண்டுமே மருந்து, மாத்திரை நிறுவனகளுக்கே சாதகமாகிறது. விழிப்போடு பனைவளர்த்தலை முன்னெடுக்க வேண்டும்.

பனை கருப்பட்டியின் நன்மைகள் :

கருப்பட்டியுடன் நன்கு விளைந்த தேங்காயை சேர்த்து உண்ணும் பொழுது உடல் வலிமை பெரும்.

கருப்பட்டி சேர்த்து செய்யப்படும் உளுந்தங்கஞ்சி பெண்களுக்கு மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் இரத்த இழப்பை ஈடு செய்யும்.

வயிற்றுவலியை போக்க கருப்பட்டி சாப்பிடலாம். சீரகத்தை வறுத்து சுக்கு மற்றும் கருப்பட்டி சேர்த்து சாப்பிட்டால், நன்கு பசி எடுக்கும்.

கருப்பட்டியில் சுண்ணாம்பைக் கலந்து சாப்பிட்டால் உடல் சுத்தம் அடையும்.

கருப்பட்டி ரத்தத்தை சுத்திகரித்து உடலுக்கு சுறுசுறுப்பைக் கொடுக்கும். மேனி பளபளப்பு பெறும்.

கரும்பு சர்க்கரைக்குப் பதில் கருப்பட்டியைப் பயன்படுத்தினால் பற்களும், எலும்புகளும் உறுதியாகும்.

குழந்தைகள் முதல் பெரியவர் வரை இதைச் சாப்பிடலாம். நமக்குத் தேவையான கால்சியம் இதில் கிடைக்கிறது.

சுக்கு கருப்பட்டி :

சுக்கு கருப்பட்டி பெண்களின் கர்ப்பப்பைக்கு மிகவும் ஏற்றது. சுக்கு, மிளகு கலந்து கருப்பட்டியை குழந்தை பெற்ற பெண்கள் சாப்பிட்டால் பால் நன்றாக சுரக்கும்.அந்தத் தாய்ப்பாலைக் குடிக்கும் குழந்தைகளுக்கு நல்ல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கப் பெறும்.

ஓமத்தை கருப் பட்டியுடன் சேர்த்துச் சாப்பிட்டால் வாயுத் தொல்லை நீங்கும். குப்பைமேனிக் கீரையுடன் கருப்பட்டியைச் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளித் தொல்லை நீங்கும்.

கருப்பட்டி காபி:

ஆண்மையை வீரியப்படுத்துவதிலும் கருப்பட்டிக்கு தனிப்பங்கு உண்டு. காபியில் சீனிக்கு பதிலாக கருப்பட்டிப் போட்டுக் குடித்தால் உடலில் சர்க்கரையின் அளவு கட்டுப்பாடாக இருக்கும்.

சர்க்கரை நோயாளிகளும் கூட கருப்பட்டி காபி குடிக்கலாம். இதில் சுண்ணாம்புச் சத்தும், நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகமாக இருக்கிறது.

சர்க்கரை நோயாளிகள், கைக்குத்தல் அரிசி சாதத்துடன் கருப்பட்டியைக் கலந்து சாப்பிட்டு வந்தால்.

சர்க்கரையின் அளவு கட்டுப்பாட்டில் இருப்பதுடன், அடிக்கடி சிறுநீர் போவதும் குறையும். உடலுக்கு தேவையான ஆற்றலை தரக்கூடிய உணவாக கருப்பட்டி உள்ளது.

-நன்றி மாவேள்
GET UPDATES