ஒரு நிமிடத்தில் அதிகாரியையே நிலைகுலைய வைத்த சாரதி: திகைப்பூட்டும் காட்சி வெளியானது..!!

2 months agoநேற்று காலை கடமையில் இருந்த ஒரு பொலிஸ் அதிகாரிக்கு கொடூரமான முறையில் ஒரு சோகம் நிகழ்ந்துள்ளது.

ஒன்ராறியோ மாகாண போலீசார் அதிகாரி ஒருவர் வாகனம் ஒன்றினால் மோதப்பட்டு இழுத்து செல்லப்பட்டதால் கடுமையான காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.

குறிப்பிட்ட வாகனம் அதிகாரியை மோதியதுடன் வீதியில் அவரை இழுத்து சென்றதாக மேலும் தெரிவித்தனர்.

அதிகாரியின் காயங்கள் ஆரம்பத்தில் உயிராபத்தானதாக கருதப்பட்டதாகவும் ஆனால் நிலைமை முன்னேற்றமடைந்துள்ளதாகவும் பீல் பிராந்திய பொலிசார் தெரிவித்தனர்.

சம்பவ இடத்தை விட்டு சாரதி ஓடி விட்டார்.பொலிசார் கறுப்பு நிற கிறைஸ்லர் வாகனம்- கறுப்பு டிரிம் கொண்ட கியுபெக் உரிம தகடுடனான வாகனத்தை பொலிசார் தேடிவருகின்றனர்.

ஒருவேளை யாருடைய வாகனத்தின் முன்புற கேமராவிலாவது இந்த காட்சி பதிவாகி இருந்தால், தயவு செய்து சாட்சி சொல்ல வாருங்கள் என்று போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.
GET UPDATES