விளையாடிய விதி... யாழ் தம்பதிக்கு கனடாவில் நேரிட்ட துயரம்..??

3 months ago2015ஆம் தமக்கு சொந்தமில்லாத வீட்டை போலி ஆவணங்கள் பயன்படுத்தி அடகு வைத்து இரண்டாவது தடவையாக கடன் பெற்ற மோசடி தொடர்பில் இலங்கை யாழ்பாணத்தை சேர்ந்த சிவகுமார் குமாரவேலு மற்றும் நகுலேஸ்வரி சிவகுமார் தம்பதியினர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

தற்போது போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை தம்பதி மீது சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு நீதிமன்றினால் மீளப் பெற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.

கனடா மார்க்கம் பகுதியில் வாழும் இலங்கை தம்பதிக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்த குற்றச்சாட்டு மீளப்பெறப்பட்டுள்ளது.

தம்பதியருக்கு எதிரான ஆதாரங்களை முழுமையாக மீளாய்வு செய்த பின்னர், 57 வயதான சிவகுமார் குமாரவேலு மற்றும் 54 வயதான நகுலேஸ்வரி சிவகுமார் ஆகியோருக்கு எதிராக குற்றச்சாட்டுகளை மீளப்பெற்று கொள்வதாக Crown நீதிமன்ற அரச வழக்கறிஞர் Matthew Bloch தெரிவித்துள்ளார்.

மொழி ஒரு தடையாக இருந்ததுடன், என்ன நடக்கிறது என்பதை இருவரும் அறிந்திருந்தார்களா, என்பது குறித்து உண்மையில் வருத்தமாக உள்ளதென அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.

இந்த வழக்கின் ஆரம்பத்தில் தண்டனைக்குரிய நியாயமான காரணங்கள் இருந்த போதிலும், Crown நீதிமன்ற மீளாய்வின் பின்னர் அவ்வாறான ஒன்று இல்லை என கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார் .
GET UPDATES